33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.. ராஜ்ய சபாவில் நிறைவேறியது.. எப்போது சட்டமாகும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவையில் நேற்று 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி 5 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து மத்திய கேபினட் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

33% reservation bill for women is expected to be tabled in the Rajya Sabha today.

27 ஆண்டுகள் பழமையான இந்த கோரிக்கையை மத்திய அரசு சட்டமாக்குவதை எதிர்க்கட்சிகள் உட்பட பலர் வரவேற்றனர். கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி, எம்பிக்கள் பிரியா விடை கொடுத்துவிட்டு மதியம் நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு சென்று அவை நடவடிக்கைகள் தொடங்கினர்.

அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்மக்களவையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "திங்கட்கிழமை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் அளித்தது. அனைத்து கட்சி எம்பிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பல முறை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வாஜ்பாய் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. ஆனால், எம்பிக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் அது நிறைவேறவில்லை." என்றார். இந்த நிலையில் நேற்று மக்களவையில் 33% மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது.

முன்னதாக மசோதா தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பினார். அதில், "உடனே செயல்படுத்தும் விதமாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் வரை காத்திருக்கக்கூடாது." என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மசோதா மீது உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "ஏற்கனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது. இது அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா போல் இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜீவ் காந்தியின் கனவாகும்.

உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கி சட்டத்தை நிறைவேற்றியவர் ராஜீவ் காந்தி. காங்கிரஸ் இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கிறது. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் காட்டுவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி." என்று கூறினார்.

இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 பெண் எம்பிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். மொத்தம் 8 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் 60 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உரையாற்றினர். இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 454 எம்பிக்கள் ஆதரவாகவும், மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அனைவருமே இந்த மசோதாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதன் மூலம் இந்த மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், அடுத்து இது குடியரசுத் தலைவர் பரிசீலனைக்குச் சென்று சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+