டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்...பீதியை கிளம்பும் மருத்துவ கவுன்சில்

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா வைரசால் இந்தியாவில் இன்னும் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.

Recommended Video

    நாட்டில் 5ல் ஒருவருக்கு கொரோனா தாக்கம்: ஐசிஎம்ஆர் அதிர்ச்சி ‘ஆய்வு’ முடிவு!

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 3 வது முறையாக நாடு தழுவிய சீரோ சர்வே ஒன்றை சமீபத்தில் நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி துவங்கி, இந்த ஆண்டு ஜனவரி 8 வரை இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், 28,589 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள 21.4 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    3rd Nationwide Sero Survey Shows Large Proportion of India Still Vulnerable to Covid-19: ICMR

    10 முதல் 17 வயதிற்குட்பட்ட 25.3 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 23.4 சதவீதம் பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி உள்ளனர். 7171 சுகாதாரப் பணியாளர்களின் ரத்த மாதிரிகளும் இந்த காலகட்டத்தில் சேகரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டதில் 25.7 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஒன்றல்ல.. இரண்டல்ல... 4000 கொரோனா வகைகள்... பகீர் கிளப்பும் பிரிட்டன் அமைச்சர்ஒன்றல்ல.. இரண்டல்ல... 4000 கொரோனா வகைகள்... பகீர் கிளப்பும் பிரிட்டன் அமைச்சர்

    21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்கள் அல்லது 700 கிராமங்களை தேர்வு செய்து இந்த 3 கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 86.04 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 7030 பேருக்கும், கேரளாவில் 6380 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    English summary
    Over 21 per cent of the population, aged 10 years and above, showed evidence of past exposure to COVID-19 in the ICMR's latest national serosurvey, the government said on Thursday, noting that a large proportion of people are still vulnerable to the infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X