இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு.. குற்றஞ்சாட்டப்பட்ட லடாக் மாணவர்கள் 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்!
டெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 லடாக் மாணவர்கள் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி ஹைகோர்ட் இவர்களுக்கு பெயில் வழங்கியது.
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்தது. சிறிய அளவிலான ஐஇடி வகை குண்டு வெடித்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் இந்த குண்டுவெடிப்பில் சேதம் அடைந்தன.

இந்த குண்டு வெடிப்பில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டெல்லி போலீசார் 4 லடாக் மாணவர்களை கைது செய்தனர். டெல்லியில் தங்கி படித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்ப 4 லடாக் மாணவர்கள் இந்த தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் என்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த 4 லடாக் மாணவர்களும் பெயிலில் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி ஹைகோர்ட் இவர்களுக்கு பெயில் வழங்கியது. இவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இவர்கள் குண்டு வைத்ததற்கான ஆதாரம் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது. எல்லோரும் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட நாஸிர் ஹுசைன், ஜுல்பிகர் அலி வாசிர், அய்யாஸ் ஹுசைன், முஸம்மில் ஹுசைன் ஆகியோர் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு வாதத்தின்போது, நான்கு போரில் ஜுல்பிகர் அலி வாசிர், அய்யாஸ் ஹுசைன், முஸம்மில் ஹுசைன் மூவரும் டெல்லிக்கு படிக்க வந்தவர்கள் என்றும், நாஸிர் ஹுசைன் டெல்லி பக்கமே கடந்த ஒன்றரை வருடமாக வரவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது. மாணவர்கள் தரப்பு வாதத்தை டெல்லி ஹைகோர்ட் மேஜிஸ்டிரேட் பங்கஜ் சர்மா ஏற்றுக்கொண்டார்.
இவர்கள் 4 பேருக்கு எதிராக போலீஸ் எந்த ஆதாரத்தையும் பதிவு.செய்யவில்லை . இவர்கள் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பிலும் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இவர்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி ஹைகோர்ட் இந்த வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications