டெல்லி திகார் சிறைக்கே சென்று சுகேஷை சந்தித்த 4 பாலிவுட் நடிகைகள்.. விசாரணை அதிர்ச்சி தகவல்
டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை 4 பாலிவுட் நடிகைகள் சந்தித்ததாக புது தகவல் கிடைத்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தர தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுப்பதாக பணமோசடி செய்த வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே தனது மனைவி நடிகை லீனாவை வைத்து மருந்து நிறுவனங்களின் மனைவிகளிடம் அவர்களது கணவர்களை வழக்கிலிருந்து வெளியே எடுப்பதாக கூறி ரூ 200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

லீனா
இந்த மோசடி தொடர்பாக சுகேஷ், மனைவி லீனா, அவரது உதவியாளர் பிங்கி இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து பறித்த பணத்தில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோராா பதேஹி ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பரிசு பொருள்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

அமலாக்கத் துறை
இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அண்மையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நடிகை நேராவை அழைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் ஜாக்குலினிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜாக்குலினுடன் நெருக்கம்
அது போல் ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளந. நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங், அருஷா பாட்டீல் ஆகிய 4 நடிகைகளும் சிறைக்கு சென்று சுகேஷை பார்த்துள்ளனராம்.

பிங்கி இரானி
அவரிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்களையும் பெற்றதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் பிங்கி இரானி. இந்த 4 பேரிடமும் சுகேஷ் குறித்து பிங்கி இரானி ஒவ்வொரு விதமாக சொல்லியுள்ளாராம். நிகிதா தம்போலியிடம் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர் என்றும் அவரது பெயர் சேகர் என்றும் கூறியிருந்திருக்கிறார்.

எத்தனை கோடி
அது போல் சோபியா சிங்கிடம் சேகர் ரெட்டி என்ரும் சினிமா பட தயாரிப்பாளர் என்றும் பிங்கி , சுகேஷை அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகை நிகிதா, சுகேஷை சந்திக்க ஏற்பாடு செய்ததற்கு பிங்கிக்கு ரூ10 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்த 10 லட்சத்தில் ரூ 1.5 லட்சம் நிகிதாவுக்கு கொடுக்கப்பட்டது. நிகிதா 2018-ஆம் ஆண்டு சுகேஷை சந்தித்தார். அத்துடன் அவர்கள் சந்திக்கவே இல்லை. இவர்கள் எல்லாம் சிறையில் சென்று சந்தித்தவுடன் அந்த நடிகைகளின் வங்கிக் கணக்குகளில் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications