சினிமாவை மிஞ்சும் சம்பவம்! பங்களாவை வாடகைக்கு எடுத்து நைஜீரியர்கள் செய்த காரியம்.. அதிர்ந்த டெல்லி
டெல்லி: டெல்லியில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் நவீன முறையில் லேப் அமைத்து மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் சொகுசு பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை தயாரித்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் யாருக்கும் தெரியாமல் நவீன செட் அப்கள் ஏற்படுத்தி சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு மெத்தாம்பேட்டமைனை இந்த கும்பல் தயாரித்துள்ளது. நைஜீரிய கும்பல் சிக்கியது எப்படி, என்பது குறித்து விவரமாக பார்போம்.

மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் இந்தியாவில் பயனப்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான தூண்டுதல் மருந்தான மெத்தாம்பேட்டமைன் பார்ட்டிகளில் போதை மருந்தாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்தின் பக்க விளைவுகள் மிகவும் மோசமானவை. உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. தொடர்ச்சியாக மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு, ஞாபக மறதி, வலிப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
போதைப்பொருள் தயாரிப்பு: ஆபத்து மிக்க இந்த போதைப்பொருளை அதிக போதைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனை தயாரிப்பு உள்ளிட்டவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் வெளிநாட்டவர்களும் இந்தியாவில் வந்து தங்கி சட்ட விரோதமாக இந்த போதைப்பொருள் தயாரிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தான் உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே டெல்லி எல்லையை ஒட்டி சொகுசு பங்களா ஒன்றை நைஜீரியர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த வீட்டில் நைஜீரியர்களான உச்சேன்னா ஜேம்ஸ் (வயது 49), அலிடுமோ இஃபெடி ஷேட்ரக் (28), எஸ் இபே எமேகா ஷிபுசோ என்ற இகோ (56), கென்ய நாட்டை சேர்ந்த உஸ்தா என்ற ஒசே (வயது 44) ஆகிய நான்கும் பேரும் மெத்தாம்பேட்டமைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4 பேர் கைது: இதற்காக வீட்டில் லேப் செட் அப் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து வெளிநாட்டவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அப்போது வீட்டில் சோதனை செய்த போது லேப் அமைத்து அதற்குள் தடைசெய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் மற்றும் இந்த போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவையும் இருந்தன.
குறிப்பாக நவீன முகக்கவசம் என ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு வீட்டில் இருந்த பொருட்களை பார்த்து போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்து 445 கிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் 20.5 கிலோ மூலபொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் கைதான இரண்டு பேர் ஏற்கனவே போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த போதைப்பொருளை நைஜீரிய கும்பல் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications