மோசமான காற்று மாசுபாடு.. 40 சதவீதம் டெல்லி -என்சிஆர் மக்கள் வேறு நகரில் குடியேற விருப்பம்.. சர்வே
டெல்லி: டெல்லி மற்றும் என்.சி.ஆரில் வசிப்பவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மோசமான காற்றின் தரம் காரணமாக வேறு நகரத்திற்கு செல்ல விரும்புகிறார்கள், அதே நேரத்தில் 16 சதவீதம் பேர் அதில் பயணிக்க விரும்புகிறார்கள் என்று ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு வாழத்தகுதியற்ற நகரமாக அந்த நகரத்தை மாற்றி வருகிறது. மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு புகை மூட்டத்தால் தவிக்கிறார்கள். டெல்லி மக்களுக்கு காற்று மாசுபாடு சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது.
வயதானவர்கள் , குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் முகமூடிந்து அணிந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அபாய கட்டத்தில் டெல்லியின் நிலைமை உள்ளதால் நாளை முதல் வாகன கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது.

கணக்கெடுப்பு
டெல்லி மற்றும் என்.சி.ஆர் பிராந்தியத்தில் இருந்து 17,000 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 13 சதவீத குடியிருப்பாளர்கள் தங்களுக்கு மாசுபாட்டை சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நம்புகிறார்கள்.

40% மக்கள் விருப்பம்
40 சதவிகிதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தில்லி என்.சி.ஆரை விட்டு வேறு எங்காவது செல்ல விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் 31 சதவீதம் பேர் டெல்லி என்.சி.ஆரில் தங்கியிருக்க விரும்புவதாகவும், காற்று சுத்திகரிப்புகள், முகமூடிகள், மரங்கள் போன்றவற்றுடன் காற்றை சுவாதித்து வாழ விரும்புவதாக கூறியுள்ளனர்.

தங்க விரும்பும் மக்கள்
16 சதவீதம் மக்கள் டெல்லி என்.சி.ஆரில் தங்கியிருக்க விரும்புவதாகவும் ஆனால் மோசமான காற்று மாசுபாட்டின் போது பயணிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர். 13 சதவீதம் மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், அதிகரிக்கும் மாசுபாட்டை சமாளிக்க இது தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளனர்.

மருத்துவரை சந்தித்தனர்
கடந்த வாரத்தில் மாசு டெல்லி வாசிகளை எப்படி பாதித்து என்பது கேட்டதற்கு அதற்கு 13 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சென்று வந்ததாக தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் ஒன்று அல்து அதற்கும் மேற்படோர் மருத்துவரை சந்தித்து வந்ததாக கூறினர்.

13% மக்களுக்கு பாதிப்பில்லை
பதில் அளித்தவர்களில் 44 சதவிகிதம் தங்களுக்கு மாசு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினர், ஆனால் மருத்துவரை பார்க்கவோ அல்லது மருத்துவமனைக்குச் செல்ல கிடையாது எனறு கூறினர். 13 சதவீதம் மக்கள் மட்டுமே தங்கள் உடல்நலத்தில் மாசுபாட்டின் தாக்கம் இல்லை என்று கூறினர். " இவ்வாறு அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications