டிரம்பை அலறவிடும் பிரிக்ஸ்... புதிதாக இணையப்போகும் 44 நாடுகள் .. டாலரின் கதையை முடிக்க திட்டம்
டெல்லி: அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்பட 10 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அமெரிக்காவின் டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் கரன்சி அல்லது சொந்த பணத்தை பயன்படுத்துவது பற்றி இந்த கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்த ஆண்டு 44 நாடுகள் புதிதாக இணைய ஆர்வம் தெரிவித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதோடு, அந்த நாட்டின் டாலரின் மதிப்பை எளிதாக சரிய வைக்கலாம்.
இதனால் வரி விதிப்பு முறையால் பல நாடுகளை கதறவிடும் டொனால்ட் டிரம்ப்பின் தூக்கத்தை பிரிக்ஸ் நாடுகள் கெடுக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்துள்ளார். இதில் அதிகபட்சமாக சீனாவுக்கு 245 சதவீத வரியை விதித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி டொனால்ட் டிரம்ப் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வரியை விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரியை விதித்தார். இருப்பினும் இந்த வரி விதிப்பு முறையை அவர் தற்காலிகமாக நிறுத்தினார். ஆனால் அமெரிக்காவுக்கு எதிரியாக உள்ள சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்காமல் டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது கூடுதலாக 5 நாடுகள் இணைந்துள்ளன. எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன. இதனால் பிரிக்ஸ் நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பில் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால் பல நாடுகள் அதனை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இதனால் அமெரிக்கா டாலரின் பயன்பாடு சரியும். மதிப்பும் உலகளவில் குறையும். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் பிரிக்ஸ் கரன்சிக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டொனால்ட் டிரம்பே பலமுறை நேரடியாக பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.‛‛பிரிக்ஸ் கரன்சியை யாரும் கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் அமெரிக்கா உடனான உறவை மறந்துவிட வேண்டும்'' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கரன்சி உருவாக்கும் திட்டம் இல்லை என அறிவித்தன.
அதேவேளையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சமீபத்தில், ‛‛அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை என்பது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே பணம் செலுத்துவதற்கான மாற்று பிளாட்பார்மை ஏற்படுத்தும் முயற்சியை அது ஒருபோதும் தடுக்காது'' என்று கூறினார்.
இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் சர்வதேச வர்த்தகத்துக்கு பிரிக்ஸ் கரன்சி அல்லது அந்தந்த நாடுகளின் கரன்சியை பயன்படுத்தும் திட்டத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா நடுக்கத்திலேயே உள்ளது. ஏனென்றால் மொத்த உலக மக்கள்தொகையில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கூட்டமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக உள்ள 2 வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரிக்ஸ் கரன்சி அல்லது மாற்று கரன்சியை சர்வதேச வர்த்தகத்தில் கொண்டு வருவார்களோ என்ற அச்சம் டொனால்ட் டிரம்பின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17 வது உச்சி மாநாடு என்பது ஜுலை மாதம் 7 மற்றும் மொ் தேதிகளில் பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் நடைபெற உள்ளது. அப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மொத்தம் 44 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 23 நாடுகள் முறைப்படி பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் நோக்கத்தில் விண்ணப்பம் செய்துள்ளன. மீதமுள்ள 21 நாடுகள் வாய்மொழியாக சேர ஆர்வம் காட்டி உள்ளன. பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இன்னும் 2 மாதத்துக்கு மேல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகளை சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனா மீது தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 245 சதவீத வரியை விதித்துள்ளார். இது சீனாவின் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்துள்ளது. சீனா - அமெரிக்கா இடையே கடும் வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில் டிரம்புக்கு பாடம் புகட்ட சீனா உறுதியாக உள்ளது. அதேபோல் பிரிக்ஸின் மற்ற உறுப்பு நாடுகளான ரஷ்யா, ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகள் உள்ளன. இதனால் இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பை பெரிதாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இப்படி 44 நாடுகள் இணையும்போது ஏற்கனவே உள்ள 10 நாடுகளுடன் சேர்த்து பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் எண்ணிக்கை என்பது 54 என்ற அளவில் அதிகரிக்கும். இது நடக்கும்பட்சத்தில் உலகின் சக்திவாய்ந்த உலக நாடுகளின் கூட்டமைப்பில் பிரிக்ஸ் முன்னிலை பெறும். அதுவும் அமெரிக்கா இல்லாத அதேவேளையில் சீனா, ரஷ்யா உள்ள கூட்டணி அமைப்பாக இது விளங்கும். இதனால் அமெரிக்காவுக்கு பிரச்சனை ஏற்படும். ஏனென்றால் பல முக்கிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருக்கும். தற்போது அமெரிக்கா பல நாடுகளுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அதிக வரியை விதித்துள்ளது. ரஷ்யாவுடனும் மோதில் உள்ளது..அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில் உள்ளிட்ட பணபலம் படைத்த நாடுகளும் உள்ளன. இதனால் ‛பிரிக்ஸ்' கரன்சி மூலம் அமெரிக்கா டாலருக்கு அல்லது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் சொந்த கரன்சியை பயன்படுத்தி டாலரின் வர்த்தகத்துக்கு செக் வைத்து விடுவோர்களோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கும், அதன் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஏற்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications