மம்தாவுக்கு தொடரும் அடி... திரிணாமுல் காங். மூத்த தலைவர்கள் 5 பேர் பாஜகவில் ஐக்கியம்!
டெல்லி: திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா உள்பட 5 பேர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் எப்படியவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.

பாஜகவின் ஆசை
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எப்படியவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.

அடுத்தடுத்து விலகல்
இதற்காக அமித்ஷா பல வியூகத்தை வகுத்து வருகிறார். அவர் வகுக்கும் வியூகம் நன்கு செயல்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி பதவியை ராஜினாமா செய்தார். நேற்று சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லிக்கு சென்றனர்
இதேபோல் திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வான வைஷாலி டால்மியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா பாஜகவில் இணைவார்கள் என்று தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா உள்பட 5 பேர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
|
பாஜகவில் இணைந்தனர்
திட்டமிட்டபடி டெல்லி பாஜக அலுவலகத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசிய ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா, ருத்ரானில், ரதின் சக்ரவர்த்தி, மற்றும் பிரபி கோஷல் ஆகிய 5 பேர் பாஜகவில் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications