பாஜக இனி எந்த தேர்தலிலும் எளிதாக வெல்ல முடியாது.. ராகுல் காந்தி சவால்!
பாஜக இனி எந்த தேர்தலிலும் எளிதாக வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பாஜக இனி எந்த தேர்தலிலும் எளிதாக வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் பாஜக பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஐந்தில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறும் நிலையில் இல்லை.
முக்கியமாக பாஜக அதிகம் எதிர்பார்த்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறும் நிலையில் இல்லை. இது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி அளித்து இருக்கிறது.
|
பேட்டி அளித்தார்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தேர்தல் வெற்றி குறித்தும், பாஜகவின் தோல்வி குறித்து அவர் பேசினார். பாஜக செய்த் தவறுகள் குறித்தும் அவர் பேசினார்.

விவசாயிகள் வெற்றி
அதில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இது காங்கிரஸ் தொண்டர்களின் வெற்றி. இந்த வெற்றி விவசாயிகளுக்கானது, ஏழைகளுக்கானது, மக்களுக்கானது. காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு அதிகம் ஆகியுள்ளது. நாங்கள் இனிதான் தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

பாஜகவின் எதிர்காலம் கடினம்
மக்கள் பெருமைப்படும் ஒரு ஆட்சியை கொடுப்போம்.இந்த மாநிலங்களில் எதிர்காலத்தை நாங்கள் மாற்றுவோம். மக்கள் மத்தியில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. மோடி நல்லது எதுவும் செய்யவில்லை என்று மனநிலையில் மக்கள் உள்ளனர். இனி பாஜகவின் எதிர்காலம் கடினமானதாக இருக்கும்.

பாஜகவின் அரசியலை மக்கள் விரும்பவில்லை.
டிமானிடைசேஷன், ஜிஎஸ்டியால் மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். மக்கள் பாஜகவிற்கு இன்று ஒரு செய்தியை அளித்துள்ளனர். பாஜகவின் அரசியலை மக்கள் விரும்பவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சனையை மோடி சரி செய்யவில்லை. விவசாயிகளை மோடி தெருவில் நிற்க வைத்துவிட்டார்.

வாக்கு பதிவு எந்திரங்கள்
வாக்கு பதிவு எந்திரங்களில் பிரச்சனை இருக்கிறது. வாக்கு பதிவு எந்திரங்களை நம்ப முடியாது, அதன் முடிவுகள் எல்லா சமயமும் சரியாக இருக்காது. பல நாடுகள் வாக்குப்பதிவு எந்திரங்களை துறந்துள்ளது. மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தும்.

மூன்று பிரச்சனை
நம்மிடம் சில பிரச்சனைகள் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பது முதல் பிரச்சனை. இரண்டாவது பிரச்சனை விவசாய பிரச்சனை. மூன்றாவது பிரச்சனை ஊழல். டிமானிடைசேஷன் ஒரு ஊழல், இதை மக்களுக்கு புரிய வைப்பேன். ரஃபேல் மிகப்பெரிய ஊழல்.

பாஜக எப்போதும் தப்ப முடியாது
இந்த தவறுகளில் இருந்து பாஜக எப்போதும் தப்ப முடியாது. 2014 தேர்தலில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு அந்த தேர்தல் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது.மோடிக்கு நிறைய வாய்ப்பு இருந்தும் எதுவும் செய்யவில்லை.அவர் மக்களின் குரலை கேட்கவில்லை.விவசாயிகளின் குரலை மோடி கேட்கவில்லை.மோடி திமிருடன் செயல்பட தொடங்கிவிட்டார்.

பாஜகவிற்கு எளிதான தேர்தலாக இருக்காது.
மோடியிடம் இருந்து எப்படி நடந்து கொள்ள கூடாது என்று கற்றுக்கொண்டேன்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி எல்லோருக்கும் ஒரே கொள்கைதான்.நாங்கள் நட்பான கட்சிகள்தான். பாஜகவிற்கு மட்டும்தான் எதிரான கொள்கை இருக்கிறது.2019 தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றிபெறும். அந்த தேர்தல் பாஜகவிற்கு எளிதான தேர்தலாக இருக்காது, என்றுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications