ரெப்போ விகிதம் 50 புள்ளிகள் குறைப்பால் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்
டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைந்துள்ளார். வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஒரு சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளித்து வருகிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம். அதாவது சில்லறை பணவீக்கத்தை பொறுத்துதான் மாற்றியமைக்கும்.

இந்நிலையில் இன்று பொருளதாரக் கொள்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று நடந்தது. இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 5.75% ஆக மாற்ற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.16% ஆக குறைந்துள்ளது, இது RBI இன் 4% இலக்கை விட குறைவாக உள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பை அதிகம் என்றுதான் தகவல்கள் வெளியானது. இன்ப அதிர்ச்சி தரும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைந்துள்ளார். வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஒரு சதவதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்பட பல்வேறு வகையான கடன்களை அனைத்து வங்கிகளுமே குறைத்தன. எல்ஐசி, எஸ்பிஐ போன்ற வங்கிகள், வீட்டுக்கடனை 8.50ல் இருந்து 8 ஆக குறைத்தன. ஹெச்எப்சி வங்கி 8.45 சதவீதம் வரை வீட்டுக்கடனை குறைத்து வழங்கி வருகிறது. தற்போது 50 புள்ளிகள் குறைத்துள்ளதால், வீட்டுக்கடன் 7.50 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி வீட்டுக்கடன் 7.50 ஆக குறைந்தால் மிகப்பெரிய அளவில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஒருவர் 8.50 சதவீத வட்டியில், 20 வருடத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 36.48 லட்சம் வீட்டுக்கடன் எடுத்திருந்தால் அவர் மாதம் 31,658 இஎம்ஐ கட்டி வந்திருப்பார். ஒட்டுமொத்தமாக 20 வருடத்தில் 75,97,920ரூபாய் கட்டி முடித்து கடனை முடிக்க வேண்டியதிருக்கும்.
ஆனால் இரண்டு முறை வட்டி குறைப்பால் தற்போது 8 சதவீத வட்டியில் வீட்டுக்கடனை கட்டி வருகிறார். இஎம்ஐ கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம் இப்போது 50 புள்ளிகள் குறைப்பால் வீட்டுக்கடன் 7.50 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது- கடன் விகிதம் 7.50 சதவீதமாக குறைவதால், 29,388 ஆக இஎம்ஐ குறையும். ஒட்டுமொத்தமாக 20 வருடத்தில் 70,53,120 ரூபாய் கட்டுவார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20 வருடத்தில் 5,44,800 ரூபாய் அளவிற்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் இது சரியான புள்ளி விவரம் அல்ல.. சர்வீஸ் சார்ஜ், ஜிஎஸ்டி மற்றும் இதுவரை கட்டிய இஎம்ஐக்களை கழித்தால் கணக்கு சற்று மாறுபடும். எனினும் லட்சங்களில் லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இஎம்ஐயும் கணிசமாக குறைந்திடும் என்பதையும் கூறலாம். வீட்டுக்கடன் கார் லோன், தனிநபர் கடன் எடுக்க விரும்புவோர் என பல்வேறு வகையான கடன் வாங்குவோருக்கு ரெப்போ விகிதம் 3வது முறை குறைப்பு என்பது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications