பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. 54 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செல்போன் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
"இந்த 54 செயலிகள் செல்போனிலிருந்து பல்வேறு முக்கியமான அனுமதிகளைப் பெறுகின்றன மற்றும் முக்கியமான பயனர் தரவைச் சேகரிக்கின்றன. இந்த சேகரிக்கப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிற நாட்டில் அமைந்துள்ள சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செயலி லிஸ்ட்
தடைசெய்யப்பட்ட ஆப் பட்டியலில், ஸ்வீட் செல்ஃபி எச்டி, பியூட்டி கேமரா - செல்ஃபி கேமரா, கரேனா ஃப்ரீ ஃபயர் - இலுமினேட், விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் எக்ஸ்ரைவர், ஆன்மியோஜி அரீனா, ஆப்லாக் மற்றும் டூயல் ஸ்பேஸ் லைட் ( Sweet Selfie HD, Beauty Camera - Selfie Camera, Garena Free Fire - Illuminate, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Arena, AppLock and Dual Space Lite) உள்ளிட்ட கணிசமான பயனாளிகளால் பயன்படுத்தப்படும் செயலிகள் அடங்கும்.

டிக்டாக், ஹலோ செயலிகள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, டிக்டாக், வீசாட் மற்றும் ஹலோ போன்ற அதிகமாக இந்திய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த சமூக ஊடக தளங்கள் உட்பட 59 சீன மொபைல் ஆப்களை இந்தியா தடை செய்தது.

சீனாவுடன் மோதல்
இந்த நிலையில் இப்போது மேலும் 54 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 2020 இல் சீனாவுடனான லடாக் கல்வான் எல்லைப் பதட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் கிட்டத்தட்ட 300 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

லடாக் எல்லை
2020ம் ஆண்டு, மே 5ம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் வெடித்தது, பாங்காங் ஏரி பகுதிகளில் நடந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரும் படிப்படியாக பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை எல்லையில் குவிக்கத் தொடங்கினர்.
அதே ஆண்டு ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள், உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

குவாட் மாநாடு
சமீபத்தில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் மாநாட்டில் பங்கேற்றன. இதில் சீனாவின் எல்லை அத்துமீறல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. எல்லையில் பதற்றம் நிலவ சீனாதான் காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு 54 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மத்திய அரசு சீன செயலிகள் மீதான கடுமையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications