இந்தியாவில் மேலும் 56,211 பேருக்கு கொரோனா.. தமிழகம், மகாராஷ்டிரா மிக மோசம்.. மத்திய அரசு எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது அசுர பலத்தை காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்த கொரோனா தினசரி பாதிப்பில் 60,000-க்கும் மேல் சென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மக்கள் மாஸ்க் உள்ளிட்ட வழிமுறைகளை மறந்ததே கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்கள் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. தமிழகத்திலும் கூடுதல் கொரோனா பரிசோதனை முகாம்கள், மாஸ்க் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதியில் தடுப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறி இருக்கிறது.

56,211 பேருக்கு புதிதாக தொற்று
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 271 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 37,028 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,20,95,855 ஆக இருக்கிறது. கொரோனாவில் இருந்து மொத்தம் 1,13,93,021 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் 1,62,114 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மோசம்
5,40,720 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் புதிய பாதிப்புகளில் 78.56% இந்த 6 மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தொற்றை விரட்டியடிக்க நாடு முழுவதும் இதுவரை 5,40,720 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications