Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய்தா வாங்க கூடாது.. செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட 6 பெரிய நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. அவர் இன்று அல்லது நாளை வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்.. அவருக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

senthil balaji

செந்தில் பாலாஜிக்கு பின் வரும் நிபந்தனைகள் விதிக்கப்ப்பட்டு உள்ளன:

25 லட்சம் ரூபாய்க்கு இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், வாய்தா வாங்க கூடாது

வெளிநாடு செல்ல கூடாது

சாட்சிகளை கலைக்க கூடாது

அமைச்சர் ஆவதற்கு தடை விதிக்கப்படவில்லை.

வழக்கு கடந்து வந்த பாதை: கடந்த மாதம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனுவை விசாரணை செய்த நிலையில் ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 12 முறை இந்த வழக்கில் வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுத்துகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.

இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+