வெறும் 6 அடி இடைவெளி மட்டுமே போதாது.. வைரஸ் பரவலை அது தடுக்குமா?.. ஆய்வில் புது தகவல்
சீனாவில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வருகிறதாம்
டெல்லி: கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் எத்தகைய தன்மை வாய்ந்தது, வீரியமிக்கது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்...
ஆனால், அதற்குள் இந்த வைரஸ் பல்வேறு வடிவங்களை பெற்று பரவிவருகிறது... எனினும் மருத்துவர்களின் ஆய்வுகள் தினம் தினம் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

போலீஸ்
கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே, அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.. இதைதான் உலக மக்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்... அப்படி கடைப்பிடிக்காதவர்களை போலீசாரும் கண்காணித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஆய்வு
ஆரம்பத்தில் இருந்தே, 2 பேருக்கு நடுவில் 2 மீட்டர் இடைவெளி அதாவது ஆறரை அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த அளவு போதாது என்று தற்போது தெரியவந்துள்ளது.. இது தொடர்பாகதான் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.. காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை, திரவத்துளி உமிழ்வு முறை போன்ற 3 காரணிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகளையும் தற்போது வெளியிட்டுள்ளனர்..!

காற்றோட்டம்
அதன்படி, மூடப்பட்ட ரூம்களில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, 2 நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் இடைவெளி போதுமானதாக இருக்காது என்கிறார்கள்.. மேலும், ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள், இன்னொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் போதாது.. மூக்கு மற்றும் வாயை முறையாக மறைக்க வேண்டும், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஆய்வு
சமீப காலமாகவே, 6 அடியை தாண்டியும் வைரஸால் பரவமுடியும் என்று பல சான்றுகளை ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் வெளியிட்டு வந்தனர்.. மேலும் இந்த தூரத்தை மறுமதிப்பீடும் செய்து வந்தனர்.. இடைவெளியை கடைபிடிக்க 6 அடி ஒரு தொடக்கமாக அமைந்தாலும், மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இடைவெளி கட்டாயம் அவசியம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

நிபுணர்கள்
அதுமட்டுமல்ல, காற்று சுழற்சி, காற்றோட்டம், கூட்டத்தின் அடர்த்தி, மக்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா, அவர்கள் அமைதியாக இருக்கிறார்களா, பேசுவது, கூச்சலிடுவது அல்லது பாடுவது போன்ற பல காரணிகளைக் கருத்தில்கொள்வது இந்த 6 அடி போதுமானதா என்பதை மதிப்பிடுவதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications