உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்.. பரபரப்பு.. என்ன நடக்கிறது?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 33 நீதிபதிகள் இருக்கிறார்கள். இதன் தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியாக எஸ்.ஏ போப்டே இருக்கிறார். மொத்தம் இரண்டு அரசியல் சாசன அமர்வு உள்ளது. 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இருக்கிறது.
இந்த அமர்வுகள் எல்லாம் சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

எல்லோரும் விடுப்பு
ஆனால் யாருக்கு எல்லாம் இப்படி பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த 6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸ் மூலம் பரவும்.

என்ன வைரஸ்
இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடிய வைரஸ் ஆகும். மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட்தான் இந்த செய்தியை வெளியே தெரிவித்தது. 6 நீதிபதிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

மாஸ்க் அணிந்து வந்தார்
இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தார். அதேபோல் வழக்கறிஞர்கள் பலர் இன்று மாஸ்க் அணிந்தபடி வந்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகள் நீதிபதிகளின் விடுப்பு காரணமாக இன்று விசாரிக்கப்படாமல் போனது.

சுத்தப்படுத்தும் பணிகள்
இந்த பன்றிக் காய்ச்சல் காரணமாக உச்ச நீதிமன்றத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மற்ற நீதிபதிகள் உடன் ஆலோசனை செய்து வருகிறார். இதற்காக நீதிபதிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடந்துள்ள நிலையில், இன்னொரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதில் முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
உச்ச நீதிபதிகள் ஆறு பேருக்கு ஒரே நேரத்தில் இப்படி பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications