குப்பை லாரிக்கு அடியில் சிக்கிய 6 வயது குழந்தை.. நிற்காத டிரைவர்! 2 கிமீ தூரத்திற்கு தரதரவென.. கொடூரம்
நாட்டை உலுக்கும் வகையில் மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது.
டெல்லி: நாட்டையே மிரள வைக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளளது. விபத்து ஒன்றில் இரண்டு வயது குழந்தை லாரிக்கு அடியே சிக்கிய நிலையில், அந்த குழந்தை அப்படியே இரண்டு கிமீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்புவதாக உள்ளது.
இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இன்னுமே கூட நமது நாட்டில் சாலைப் பயணம் முற்றிலும் பாதுகாப்பான ஒன்றாக மாறவில்லை.
கடந்த 2021இல் மட்டும் இந்தியாவில் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில்1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 3.8 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். அந்தளவுக்குத் தான் நமது சாலைகள் உள்ளன.

விபத்து
நமது நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்த மோசமான விபத்துகள் பகீர் அளிக்கும் வகையிலேயே உள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று கார் ஒன்று இளம்பெண் மீது மோதியது. இதில் அந்த பெண்ணின் கால் காருக்கு அடியே மாட்டிக் கொண்டது. பெண் காரில் சிக்கியது தெரிந்தும் அச்சத்தில் அவர்கள் காரை நிறுத்தாமல் பல கிமீ தூரத்திற்குக் காரை அப்படியே ஓட்டியுள்ளனர்.

பகீர்
இதனால் அப்பெண் பல கிமீ தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பேசுபொருளானது.. இந்த விவகாரத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தலையிட்ட நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே இதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் இப்போது மீண்டும் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குப்பை லாரி
இதில் ஆறே வயதான குழந்தை ஒன்று சுமார் இரண்டு கிமீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. உபி மஹோபாவை சேர்ந்தவர் உதித் நாராயண் சன்சோரியா.. 67 வயதான இவர் தனது பேரன் சாத்விக்கை கூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த குப்பை லாரி ஒன்று அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் தாத்தா உதித் நாராயண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 கிமீ தூரம்
அவர்கள் சென்ற ஸ்கூட்டர் லாரிக்கு அடியே மாட்டிக் கொண்டது. இரண்டு வயதே ஆன சாத்விக்கின் கால் அந்த ஸ்கூட்டரில் மாட்டிக் கொண்டது. இதனால் அந்த குழந்தை அப்படியே தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிமீ தூரத்திற்கு அந்த குழந்தையும் இருசக்கர வாகனம் அப்படியே இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலை 86இல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நிற்காத ஓட்டுநர்
இந்த சம்பவம் தொடர்பான பகீர் வீடியோவும் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அந்த லாரிக்கு அடியே ஸ்கூட்டர் சிக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்க்கும் மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் லாரி டிரைவரை எச்சரிக்கிறார்கள். இருப்பினும், அவர் முதலில் வாகனத்தை நிறுத்தவே இல்லை. இதையடுத்து கொஞ்ச தூரம் முன்னாடி சென்று அவர்கள், நடுரோட்டில் கற்களைக் கொட்டியே லாரியை நிறுத்தியுள்ளனர். விபத்திற்கு பிறகும் லாரி ஓட்டுநரை அப்பகுதி மக்கள் தாக்கினர்.

இந்தியாவில் சாலைகள்
இது தொடர்பாக வாகனத்தைக் கைப்பற்றி போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ய சமீபத்தில் கம்பேர் தி மார்கெட் என்ற நிறுவனம் டிரைவர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் இந்தியாவுக்கு 2.34 மார்க் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications