எச்சரிக்கை : இந்த APPலாம் உங்க மொபைல்ல இருக்கா?... உடனே அன்இன்ஸ்டால் பண்ணுங்க..?
டெல்லி: கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 7 ஆப்கள் மூலம் ஜோக்கார் மால்வேர் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதால், மொபைல் பயன்பட்டாளர்கள் தங்கள் மொபைல்களில் இருந்து குறிப்பிட்ட அந்த 7 அப்ளிகேஷன்களை உடனடியாக நீக்குமாறு மொபைல் பாதுகாப்பு நிறுவனமான ப்ராடியோ கூறியுள்ளது
ஆண்ட்ராய்ட் மொபைல்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு தேவையான பல்வேறு அப்ளிகேஷன்களை தாங்கள் வைத்திருக்கும் கூகுள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, கூகுள் நிறுவனத்தில் ப்ளேஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேவையைப் பொருத்து பணம் செலுத்தி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களும் ப்ளே ஸ்டோரில் உண்டு.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட சுமார் 30 ஆப்கள் மூலம் ஜோக்கர் மால்வேர் எனப்படும் ஹேக்கிங் டூல் மொபைல் பயன்பாட்டாளர்களை பாதித்தது. முக்கிய தகவல்கள், மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து பெருமதிப்பிலான பணம் ஆகியவை திருடப்பட்டது. இதையடுத்து அடுத்து கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.

ஜோக்கர் மால்வேர்
இந்நிலையில் சுமார் 6 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 7 அப்ளிகேஷன்களை ஜோக்கர் மால்வேர் டிகிரிப்ட் செய்து மொபைல் போன்களில் பரவி வருவதாகவும் இதனால் அந்த அப்ள்கேஷன்களை மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக நீக்குமாறும் சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான ப்ராடியோ கூறியுள்ளது.

மீண்டும் பாதிப்பு
மொபைல் பாதுகாப்பு தீர்ப்புகள் நிறுவனமான ப்ராடியோ வெளியிட்டுள்ள தகவலின்படி ஜோக்கர் மால்வேர் இன் புதிய திரிபு அதிகாரபூர்வமான கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 15 அப்ளிகேஷன்களை பரவி கடந்தாண்டு பெரிய பாதுகாப்பு அபாயத்தை உருவாக்கியது. நீண்ட இழுபறிக்குப் பின் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் அந்த அப்ளிகேஷன்களை நீக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஜோக்கர் மால்வேர் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை பாதித்துள்ளது.

கலர்மெசேஜ் அப்ளிகேசன்
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா பேசுகையில் , ஜோக்கர் மால்வேர் குறைந்தது 14 ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பாதித்ததை கண்டறிந்தார். இந்த மென்பொருள் முதன்முதலில் 2017 கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நீக்குவது கூகுளுக்கு பெரும் சவாலாக விளங்கிய நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 5 லட்சம் பயனாளர்கள் பயன்படுத்தப்படும் கலர் மெசேஜ் என்ற பிரபலமான அப்ளிகேசன் தற்போது ஜோக்கர் மால்வேரால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் ரஷ்யாவில் உள்ள சர்வர்களில் இருந்து இயக்கப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஹேக்கிங் ஃப்ளீஷ்வேர்
ஜோக்கர் மால்வேர் "Fleeceware" வகையைச் சேர்ந்தது. அது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பணத்தைத் திருடுவதோடு, உங்கள் போன் மெமரியில் பதிந்து வைத்துள்ள செல்போன் எண்களுக்கும் வாட்ஸ்ஆப் குழுக்களுக்கும் தேவையற்ற எஸ்எம்எஸ் மற்றும் லிங்குகளை அனுப்பும். அந்த மெசேஜ் மற்றும் லிங்குகளை ஓபன் செய்யும்போது அவர்களின் தகவல்களும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. மேலும் எந்த அனுமதியும் இல்லாமல் ஆன்லைனில் உள்ள சந்தா, மற்றும் கட்டணம் செலுத்தும் லிங்குகளையும், ஆன்லைன் விளம்பரங்களை தானாக கிளிக் செய்யும்.

பாதிப்பை கண்டுபிடிக்க முடியாது
அப்போது வரும் மெசேஜ்களையும் ஏன் OTPகளை கூட மால்வேர் உருவாக்கி வைத்திருக்கும் கோடால் படிக்க முடியும். மேலும் நீங்கள் படிப்பதற்கு முன்னதாகவே அந்த மெசேஜ்களை தானாக இந்த மால்வேர் அழித்துவிடும். உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட்களை நீங்கள் சரிபார்க்காத வரை, ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது என ப்ராடியோ எச்சரித்துள்ளது.

நீக்கப்பட வேண்டிய அப்ளிகேசன்கள்
மேலும், ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன்களையும் ப்ராடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. கீழ்கண்ட அப்ளிகேசன்கள் உங்கள் மொபைல் இருந்தால் உடனடியாக நீக்க வேண்டுமெனவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
1. Color Message
2. Safety AppLock
3. Convenient Scanner 2
4. Push Message-Texting&SMS
5. Emoji Wallpaper
6. Separate Doc Scanner
7. Fingertip GameBox












Click it and Unblock the Notifications