அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவம் உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் காமெக் செக்டாரில் பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று முன் தினம் மிக உயர்ந்த மலைப் பகுதியான காமெக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Recommended Video
காத்திருக்கும் Tejas | Indian Army பலம் | Russia VS Ukraine | Oneindia Tamil


Click it and Unblock the Notifications
