30 ஆயிரம் வாங்கும் அரசு ஊழியர் வீட்டில்..ரூ7 கோடி-பல சொகுசு கார்கள்..சோதனைக்கு சென்ற அதிகாரிகள் ஷாக்

மத்திய பிரதேச காவல்துறை வீட்டு வசதி வாரிய ஒப்பந்தங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அரசு உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ஹேமா மீனா. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறும் இவர் அளவுக்கதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தது.
இதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். அப்போது அவரது அலுவலகம் வீடு ஆகியவற்றில் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது மட்டும் இல்லாமல் 5-7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் 20 கார்கள் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதோடு ரூ. 30 லட்சம் மதிப்பு கொண்ட பிரம்மாண்ட தொலைக்காட்சி இருந்ததைக் கண்டு அதிகாரிகள் வியப்பு அடைந்தனர். அதுபோக 20 ஆயிரம் சதுர அடியில் நிலம் 24 க்கும் மேற்பட்ட பசுக்களையும் ஹேமா வைத்து இருந்தார். தனது வீட்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் பேசுவதற்காக விலை உயர்ந்த வாக்கி டாக்கிகளையும் வைத்து இருந்து இருக்கிறார். வீட்டில் செல்போன் ஜாமர்கள் என சக நவீன வசதிகளையும் வீட்டில் வைத்துள்ளார்.
அவர் வைத்திருக்கும் வீட்டை கட்டுவதற்கு மட்டும் ரூ1 கோடி மேல் செலவு செய்துள்ளாராம். சூரிய ஒளி தகடு பதிக்கும் ஊழியர்கள் போல அவரது வீட்டிற்குள் நுழைந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். ஹேமா மீனா தனது வருமானத்தை விட 232 சதவிகிதம் அதிகம் சொத்துக்களை குவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காவலர் குடியிருப்புகளுக்கான பொருட்களை முறைகேடாக தனது சொந்த வீட்டிற்கு கட்ட பயன்படுத்தியிருப்பதையும் போலீசார் முதல் கட்ட விசாரணையில் கண்டறிந்தனர். ஹேம மீனா வீட்டில் இருந்து விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹேமா மீனா வீட்டில் தொடர்ந்து சோதனை நடப்பதாகவும் இன்னும் கணக்கில் வராத பொருட்கள் கிடைக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை நாங்கள் பறிமுதல் செய்துள்ள பொருட்களின் உண்மையான மதிப்பை அறிய மேலும் சில துறை அதிகாரிகளின் உதவியை நாடியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தில் மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை மற்றும் சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications