டெல்லி: நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியேற்றினார்.
நமது தேசத்தின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நமது தேசத்துக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து இந்தியா முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாள் 1950 ஜனவரி 26.
ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாத்தில் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தேசிய கொடி ஏற்றினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
Jan 26, 2023, 12:13 pm IST
டெல்லி ராஜபாதையில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நிறைவில் பாரத் மாதா கீ ஜே என முழக்கங்கள் எழுப்பப்பட்டன
பழங்குடி தலைவர் பிர்சா முண்டாவின் உருவத்துடன் ஜார்க்கண்ட் மாநில அலங்கார ஊர்தி
#RepublicDay2023 | The tableau of Jharkhand shows the famous Baidyanath Temple located in Deoghar. Lord Birsa Munda is depicted in the front of the tableau. pic.twitter.com/At5Y5ZWmJA
திரிபுரா சுற்றுலாத்துறையை வெளிப்படுத்தும் வகையில் மாநில ஊர்தி
#RepublicDay | Tripura's tableau with the theme 'Sustainable Livelihood through tourism & organic farming in Tripura with active participation of women', displayed at the Republic Day parade. It also shows Mahamuni Buddha Mandir. pic.twitter.com/JTDA0c1NSi
வேலுநாச்சியார், அவ்வை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் தமிழ்நாடு ஊர்தி
Jan 26, 2023, 11:27 am IST
காற்றினிலே வரும் கீதம்.. மகளிர் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊர்தி
Jan 26, 2023, 11:26 am IST
மாநிலங்களின் காலாசார, பண்பாட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் மாநிலங்களின் ஊர்தி- அட்டப்பாடி பழங்குடி மக்கள் நாட்டுப்புறப் பாடலுடன் கேரளா ஊர்தி
Jan 26, 2023, 11:24 am IST
அமர்நாத் பனிலிங்கத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி
The tableau of Jammu & Kashmir with its theme 'Naya J&K' showcases the holy Amarnath Shrine and Tulip gardens and lavender cultivation pic.twitter.com/ELdW72ooEl
டெல்லி ராஜபாதை நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தூதர்கள் பங்கேற்பு
Jan 26, 2023, 10:47 am IST
தேசத்தின் பாதுகாப்பு வலிமையை பறைசாற்றும் பிரம்மாண்ட முப்படை அணிவகுப்பு
#RepublicDay2023 | The detachment of the Main Battle tank Arjun of 75 Armoured Regiment marches down the Kartavya Path. This is being led by Captain Amanjeet Singh. pic.twitter.com/m0nSLoSexR
அர்ஜூன் டாங்கி, நாக் ஏவுகணைகளுடன் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை
President Droupadi Murmu takes the salute of Lt Siddhartha Tyagi who leads the NAG Missile System of 17 Mechanised Infantry Regiment#RepublicDay2023pic.twitter.com/fAOIEO1H9n
டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி பங்கேற்பு
4:45 PM, 25 Jan
டெல்லியில் நாளை குடியரசு தின கொண்டாட்டங்கள்
4:45 PM, 25 Jan
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
6:45 PM, 25 Jan
நாட்டின் 74வது குடியரசு தினம், நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள கண்கவர் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளார். முன்னதாக இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
7:09 PM, 25 Jan
குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்
7:10 PM, 25 Jan
குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம்: திரெளபதி முர்மு
7:11 PM, 25 Jan
நாம் அனைவரும் இந்தியர்கள், பல மதங்களும், மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்துள்ளன
7:13 PM, 25 Jan
நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம். இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி
7:14 PM, 25 Jan
74வது குடியரசு தினத்தையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
7:15 PM, 25 Jan
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நமது பயணம் ஆச்சரியமானது. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது
7:16 PM, 25 Jan
மகாத்மா காந்தியின் குறிக்கோளின்படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்
7:17 PM, 25 Jan
தேசிய கல்விக் கொள்கையில் லட்சிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் கல்வி செயல்முறையை விரிவுபடுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது
7:20 PM, 25 Jan
ககன்யான் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக நமது நாடு மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது
7:21 PM, 25 Jan
நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. இளம்பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது
7:23 PM, 25 Jan
மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு அதிக பலன் தருவதாக உள்ளன. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு கொரோனா வைரஸ் காலத்தில் நிவாரணம் வழங்கியுள்ளது
7:24 PM, 25 Jan
நமது அரசியல் சாசனம் கடந்த காலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாகவே இருக்கிறது
7:25 PM, 25 Jan
நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது நமது கடமையாகும். நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
7:28 PM, 25 Jan
நமது நாகரிகம் மிகவும் பழமையானது. அதேநேரத்தில் நமது நவீன ஜனநாயகம் இயற்கையாகவே மிகவும் இளமையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை, இந்தியாவை நம்பிக்கையான தேசமாக மாற்ற வழிவகுத்தது
6:37 AM, 26 Jan
வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குவார்
6:37 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரை சாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்
6:38 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்
6:38 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ரவி கொடியேற்றிய பின் முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்
6:38 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்
6:38 AM, 26 Jan
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு
6:38 AM, 26 Jan
45 விமானங்களின் சாகசங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன
6:38 AM, 26 Jan
17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்கின்றன
6:38 AM, 26 Jan
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி பங்கேற்பு
6:39 AM, 26 Jan
நாட்டின் அனைத்து பாதுகாப்பு படைகளும் ராணுவ அணிவகுப்பில் இடம்பெறும்
6:39 AM, 26 Jan
ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றிய உடன் ராணுவ அணிவகுப்பு நடைபெறும்
6:39 AM, 26 Jan
டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியேற்றுகிறார்
Republic Day 2023 Speech and Celebrations (குடியரசு தின விழா 2023 உரை & கொண்டாட்டங்கள் ) LIVE News Updates in Tamil: Check Out the Live News Updates on Republic Day 2023 Celebrations, President Droupadi Murmu Speech, Wishes, Schedule and Much more at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.