டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

76 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் LIVE : மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழகம் வந்தபோது மகாத்மா காந்தி மேலாடையை துறந்த நிகழ்வின் நினைவாக சிலை திறக்கப்பட்டுள்ளது. இது இன்று முதலே மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.

நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் அடிப்படையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

76th Independence Day Live: President of India to address the nation

நமது நாட்டின் சுதந்திர தின விழா தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Newest First Oldest First
10:17 AM, 15 Aug

எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
10:17 AM, 15 Aug

எழும்பூர் அருக்ங்காட்சிய வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
10:16 AM, 15 Aug

காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வின் நினைவாக சிலை திறக்கப்பட்டுள்ளது
9:55 AM, 15 Aug

குளத்தில் மூழ்கிய சிறார்களை காப்பாற்றியதற்காக எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கபட்டது
9:55 AM, 15 Aug

முதலமைச்சரின் சிறந்த இளைஞர் விருது ஸ்ரீகாந்த், விஜயகுமார், முகமது ஆசிக், சிவரஞ்சனிக்கு வழங்கப்பட்டது
9:50 AM, 15 Aug

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டு
9:50 AM, 15 Aug

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது
9:50 AM, 15 Aug

தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசிக்கு விருது வழங்கப்பட்டது
9:46 AM, 15 Aug

சுதந்திர தினத்தையொட்டி 2022ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
9:46 AM, 15 Aug

காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:39 AM, 15 Aug

தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தோடு சேர்த்து ரூ.5 ஆயிரத்தையும் தமிழக அரசுக்கு வழங்கினார் நல்லகண்ணு
9:36 AM, 15 Aug

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது
9:36 AM, 15 Aug

ஏபிஜே அப்துல் கலாம் விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கு வழங்கப்பட்டது
9:36 AM, 15 Aug

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் இன்னாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:35 AM, 15 Aug

தேசியக் கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும், அவை ஒரே அளவில் இணைந்து காணப்படுகிறது
9:34 AM, 15 Aug

பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்
9:34 AM, 15 Aug

அனைத்து மக்களின் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:33 AM, 15 Aug

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:32 AM, 15 Aug

ஒவ்வொருவரின் கோரிக்கையையும் நிறைவேற்றும் முதல்வராக இருக்க ஆசை: ஸ்டாலின்
9:30 AM, 15 Aug

விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம்
9:29 AM, 15 Aug

வளர்ச்சி என்பது இதன் அடிப்படையில் கொண்டதாக இருக்க திட்டமிட்டு செயல்படுகிறோம்: முதல்வர்
9:29 AM, 15 Aug

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
9:28 AM, 15 Aug

கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி, பல்துறை வளர்ச்சியாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்
9:24 AM, 15 Aug

சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்
9:24 AM, 15 Aug

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக வந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழகம் தான்: ஸ்டாலின்
9:21 AM, 15 Aug

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:21 AM, 15 Aug

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.20,000-ஆக அதிகரிப்பு
9:21 AM, 15 Aug

தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.10,000 உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
9:20 AM, 15 Aug

கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000 ஆக உயர்வு
9:18 AM, 15 Aug

விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்: முதல்வர் ஸ்டாலின்
READ MORE

English summary
The President of India, Smt Droupadi Murmu, will address the nation todya August 14, 2022 on the eve of the 76th Independence Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X