டெல்லி: 7 கட்ட லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடித்துள்ளது. கடைசி கட்டமாக இன்று 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடைசி கட்ட தேர்தல் காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஜார்கண்ட் மாநிலம், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கே, நிறைவு பெற்றது.
May 19, 2019, 6:22 pm IST
லோக்சபா தேர்தல்
7ம் கட்ட வாக்குப்பதிவில் 6 மணி வரை 60.31% வாக்குகள் பதிவு
May 19, 2019, 5:56 pm IST
டெல்லி
நாடு முழுக்க 542 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Election Commission: Polling has concluded in 542 parliamentary constituencies across states and union territories. pic.twitter.com/01rjyLtVfL
மத்திய பிரதேசத்தில் 3 மணி வரை 57.68% வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:02 pm IST
பீகார்
பீகாரில் 3 மணி வரை 46.68% வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:02 pm IST
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் 3 மணி வரை 63.58% வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:02 pm IST
பஞ்சாப்
பஞ்சாப்பில் 3 மணி வரை 48.77% வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:01 pm IST
சண்டிகர்
சண்டிகரில் 3 மணி வரை 50.24 % வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:01 pm IST
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் 3 மணி வரை 64.81% வாக்குகள் பதிவு
May 19, 2019, 4:01 pm IST
இமாச்சலப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தில் 3 மணி வரை 49.61% வாக்குகள் பதிவு
May 19, 2019, 3:58 pm IST
7வது கட்ட லோக்சபா தேர்தல் Live: மே. வங்கத்தில் 3 மணி வரை 63.58% வாக்குகள் பதிவு
உத்தர பிரதேசத்தில் 3 மணி வரை 46.97% வாக்குகள் பதிவு
May 19, 2019, 3:17 pm IST
பீகார்
பாட்னாவில் தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள் ஃபராஹ், சபா தங்களின் வாக்கை பதிவு செய்தனர்
Patna: Conjoined sisters Saba & Farah cast their votes as separate individuals with independent voting rights for the first time. #Bihar#LokSabhaElections2019 (Pictures courtesy- Election Commission) pic.twitter.com/t0ZFucfQiU
மத்திய பிரதேசத்தில் காலை 1 மணி வரை 43.89 % வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:15 pm IST
பீகார்
பீகாரில் காலை 1 மணி வரை 36.65% வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:15 pm IST
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் காலை 1 மணி வரை 47.55 % வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:15 pm IST
பஞ்சாப்
பஞ்சாப்பில் காலை 1 மணி வரை 36.67% வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:14 pm IST
சண்டிகர்
சண்டிகரில் காலை 1 மணி வரை 35.60 % வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:14 pm IST
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் காலை 1 மணி வரை 52.89% வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:14 pm IST
இமாச்சலப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தில் காலை 1 மணி வரை 34.89% வாக்குகள் பதிவு
May 19, 2019, 2:14 pm IST
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தில் காலை 1 மணி வரை 36.35% வாக்குகள் பதிவு
READ MORE
4:39 AM, 19 May
பீகார்
இம்மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 157 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 15252608 ஆகும்.
4:39 AM, 19 May
ஹிமாச்சல் பிரதேசம்
இங்கு மொத்தம் 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 5330154 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 47 ஆகும்.
4:39 AM, 19 May
ஜார்கண்ட்
இம்மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 4564681 பேர் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தகுதிபெற்றவர்களாகும். 21 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
4:40 AM, 19 May
மத்திய பிரதேசம்
இம்மாநிலத்தில், மொத்தம், 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 14913890 வாக்காளர்கள் உள்ளனர். 82 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
4:40 AM, 19 May
பஞ்சாப்
இம்மாநிலத்தில் மொத்தம் 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 20892674 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். 278 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
4:40 AM, 19 May
உத்தரபிரதேசம்
பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், 13 தொகுதிகள் வாக்குப்பதிவு சந்திக்கின்றன. இதில் வாரணாசி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகியுள்ளது. வாக்காளர் எண்ணிக்கை, 23638797. வேட்பாளர்கள் 167 பேர்.
4:40 AM, 19 May
மேற்கு வங்கம்
மொத்தம் 9 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14963064 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாகும். 111 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
4:40 AM, 19 May
சண்டீகர்
இங்கு 1 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 619285 வாக்காளர்கள் உள்ளனர். 36 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். ஆக மொத்தம் 59 தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 100175153. மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7:03 AM, 19 May
கோரக்பூரில் உ.பி. முதல்வர் பிரார்த்தனை
லக்னோ லோக்சபைக்கு இறுதி கட்ட தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள கோரகநாதர் கோயிலில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.
59 தொகுதிகளுக்கும் இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.
நாட்டில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னரே பொதுமக்கள் வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர்.
7:29 AM, 19 May
லக்னோ:
7-ஆம் கட்ட இறுதி கட்ட தேர்தலையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார். முன்னதாக அவர் கோரகநாதர் கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி மாவட்டத்துக்குள்பட்ட தரா ஜிவன்பூர் கிராமத்தில் நேற்று இரவு வந்த பாஜகவினர் 500 ரூபாய் கொடுத்துவிட்டு கையில் மை வைத்துவிட்டு சென்றனர். தாங்களே வாக்களித்துவிடுவதாகவும் கூறினர். உங்களால் இனி வாக்களிக்க முடியாது . இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
Chandauli: Residents of Tara Jivanpur village allege ink was forcefully applied to their fingers & they were given Rs 500 y'day by 3 men of their village. Say, "They were from BJP&asked us if we'll vote for the party. They told us now you can't vote. Don't tell anyone." (18.05) pic.twitter.com/yICJKNPwdt
7-ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இதில் பாட்னாவில் ராஜ்பவனில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வாக்களித்தார்.
பாட்னாவில் அமைக்கப்பட்ட ராஜ்பவனில் வாக்களித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தலில் இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக் கூடாது. ஒவ்வொரு கட்டத்துக்கும் அதிக நாட்கள் இடைவெளி தேவையில்லை.
Chief Minister of Bihar, Nitish Kumar: Elections should not be held over such a long duration, there was a long gap between each phase of voting. I will write to leaders of all parties to build a consensus on this. #LokSabhaElections2019pic.twitter.com/Qrh2ocDJpo
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கர்ஹி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக பொதுமக்களுடன் வரிசையில் நின்றிருந்தார்.
#Punjab: Cricketer Harbhajan Singh waits in queue to cast his vote at a polling booth in Jalandhar's Garhi village. pic.twitter.com/Fo2triU623
கேதார்நாத்: கேதார்நாத்தில் நான் வழிபாடு நடத்தியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். கேதார்நாத்தில் விடியவிடிய தியானம் மேற்கொண்ட மோடி கூறுகையில் எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். மன அமைதி பெற கேதார்நாத்துக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும்.
8:42 AM, 19 May
உங்கள் ஒரு ஓட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- மோடி
டெல்லி: கேதார்நாத் குகையில் தியானம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் இன்று 2019-ஆம் ஆண்டுக்கான இறுதி கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அனைவரும் வாக்களித்து வாக்குப் பதிவில் சாதனையை ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு வருங்காலங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என மோடி தெரிவித்துள்ளார்.
Today is the final phase of the 2019 Lok Sabha elections. I urge all those voting in this phase to vote in record numbers. Your one vote will shape India’s development trajectory in the years to come. I also hope first time voters vote enthusiastically.
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 19, 2019
9:19 AM, 19 May
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
Bihar: Union Minister and BJP leader Ravi Shankar Prasad arrives to cast his vote at booth no. 77 in Patna Women's College. pic.twitter.com/RRR2RJrdCR
மேற்கு வங்கத்தில் பல்வேறு தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவில் தாமதம்
10:16 AM, 19 May
உத்தர பிரதேசம்:
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் வாரணாசியில் வாக்களித்தார். இவர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்
10:17 AM, 19 May
மேற்கு வங்கம்:
கொல்கத்தாவில் பாஜக மூத்த தலைவர் மற்றும் வேட்பாளர் சி கே போஸ் வாக்களித்தார்
West Bengal: BJP Lok Sabha candidate from South Kolkata parliamentary constituency, CK Bose casts his vote at a polling booth in City College, in Kolkata pic.twitter.com/MZAKmrrUvm
The fate of 918 candidates contesting from 59 Lok Sabha constituencies spread across seven states and one Union Territory will be sealed at the end of voting on May 19.