மக்களே.. இந்த வருடத்தில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள்- நிர்மலா சீதாராமன்
டெல்லி: 2022- 2023 ஆம் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ 44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.

சொந்த வீடு
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தின் கீழ் கழிப்பறை, மின் இணைப்பு, எல்பிஜி இணைப்பு, சுத்தமான குடிநீர், ஜன்தன் கணக்கு உள்ளிட்டவை ஏழை பயனாளிகள் பெறுவதை உறுதி செய்கிறது.

எப்படி விண்ணப்பிப்பது
இந்த திட்டத்தில் முதலாவது நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம், மற்றொன்று கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் திட்டம், 3ஆவது நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் திட்டமாகும். இதற்கு ரூ 12 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், ரூ 9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாகக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (EWS) மக்களில் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தக்க சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம்.

எப்படி விண்ணப்பிப்பது
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நிலவரப்படி 65 நகரங்களில் 40,623 வீடுகள் ரூ 2,314 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications