விவசாயிகள் போராட்டம்... உற்சாகமாக பங்கேற்க வந்த 82 வயது பாட்டி கைது!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 82 வயதான பாட்டி பில்கிஸ் தாதி கைது செய்யப்பட்டார்.
இவர் டெல்லி ஷகீன்பாகில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பதற்றம் காரணமாக டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்றைய விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமூக செயல்பாட்டாளர் 82 வயது மூதாட்டி பில்கிஸ் தாதி கைது செய்யப்பட்டார்.
அரியானா-டெல்லி மாநில எல்லைக்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர். பல மாதங்களுக்கு முன்பு டெல்லி ஷகீன் பாகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தது. 82 வயது பாட்டி பில்கிஸ் தாதி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் களம் காண புறப்பட்டுள்ளார். இதுகுறித்து விவசாயிகள் போராட்டம் குறித்து பாட்டி பில்கிஸ் தாதி கூறுகையில், நாம் விவசாயிகளின் மகள்கள், அவர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்த உள்ளோம். நாம் நமது குரலை உயர்த்துவோம். அரசு நமது பேச்சை கேட்கவேண்டும் என்றார்.
ஆனால் போலீஸார் அவரைத் தடுத்து கைது செய்து அப்புறப்படுத்திக் கொண்டு போய் விட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications