8வது ஊதியக்குழுவின் பலன்கள் எப்படி இருக்கும்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும்?
டெல்லி: ஒரு பக்கம் தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய விவகாரத்தில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகிறார்கள். அதேநேரம் மத்திய அரசு ஊழியர்களோ, 8வது ஊதியக்குழுவின் ஊதிய பலன் எப்போது கிடைக்கும், அதற்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது நடக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 8 வது ஊதியக்குழு செயல்பாட்டிற்கு வந்தால், அரசு ஊழியர்கள் சம்பளம் ஐடி ஊழியர்களின் சம்பளத்துக்கு நிகராக மாற வாய்ப்பு உள்ளது. எவ்வளவு ஊதியம் உயரும், எப்போது முதல் அமலுக்கு வரும் என்பதை பார்ப்போம்.
மத்திய அரசு ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைப்பது வழக்கம். அந்த குழு தான் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

அந்த வகையில் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை 7 முறை சம்பள கமிஷன் அமைத்துள்ள மத்திய அரசு, தற்போது அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதியத்தை வழங்கி வருகிறது. எனினும் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு நிகரான ஊதியம் எல்லாம் அரசு ஊழியர்களுக்கு இல்லை. அதேபோல் பணி பாதுகாப்பு இருந்தாலும், ஓய்வு காலத்திற்கு ஏற்ற பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை..
8வது ஊதியக்குழு
இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் அதிகமாக கிடைத்தால், அதை வைத்து ஓய்வூதிய திட்டங்களை முதலீடு செய்கிறார்கள். அதேபோல் எதிர்கால தேவைகளுக்கு சேமிக்கும் திட்டங்களை முதலீடு செய்கிறார்கள். தற்போது 8வது சம்பள கமிஷன் குறித்து ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரி மாதத்தில், மத்திய அரசு 8வது சம்பள ஆணையத்தை அறிவித்தது. இந்த குழு தான் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக் போகிறது. இந்த 8வது ஊதியக் குழுவின் இரண்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் 8வது சம்பள ஆணைய குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் அடுத்த மாதம் அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
2027 ம் ஆண்டு நடைமுறைக்கு வரலாம்
தற்போதைய 7வது சம்பள ஆணையத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைய உள்ளது. தற்போதைய நிலையில் புதிய ஊதியக் குழுவின் உறுப்பினர்களை அமைத்து, மத்திய அரசால் ஜனவரி 2026 முதல் செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6வது, ஏழாவது உள்ளிட்ட முந்தைய ஊதியக் குழுக்களுடன் ஒப்பிடும்போது, ஊதியக் குழுவின் அறிவிப்பு தாமதமானதால், பரிந்துரைகளை செயல்படுத்துவது 2026-27 நிதியாண்டில் மட்டுமே செயல்பட வாய்ப்பு உள்ளது. அதாவது 2027ம் ஆண்டு தான் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
எவ்வளவு ஊதியம் உயரும்
8வது மத்திய ஊதியக் குழு (CPC) உருவாவதற்கு முன்னதாக, 7வது ஊதியக் குழு ஏற்கனவே கணிசமான ஊதிய உயர்வை வழங்கியுள்ளது என்று பரவலாக பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இதனால் புதிய குழுவால் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்கிறார்கள். ஆனால் அரசு ஊழியர்களோ, 7வது ஊதியக் குழு அதிக உண்மையான ஊதிய உயர்வை வழங்கவில்லை என்று கூறி வருகிறார்கள்.
6வது ஊதியக்குழு
தற்போதைய நிலையில், ஊதியத்தில் உண்மையான அதிகரிப்பை கணக்கிட பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இது பெயரளவு ஊதிய உயர்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, உண்மையான ஊதியம் என்பது அவர்களின் அகவிலைப்படி (DA) மூலம் பாதுகாக்கப்படுகிறது.சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எடுத்து பார்த்தால் , 6வது ஊதியக்குழுவில் தான் அவர்களுக்கு அதிக பட்ச ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாக சில புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
சம்பளம் எப்போது அதிகம்
2வது ஊதியக் குழுவைத் தவிர, 7வது ஊதியக் குழுவிற்கு முந்தைய அனைத்து ஊதியக் குழுக்களும் உண்மையான ஊதியத்தில் 20% க்கும் அதிகமான அதிகரிப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 6வது ஊதியக்குழு 54% உண்மையான ஊதிய உயர்வை வழங்கி இருந்ததாகவும், 7வது ஊதியக்குழு 14.3% அளவில் மட்டுமே வழங்கியதாகவும் சொல்கிறார்கள் சில அரசு ஊழியர்கள். அதேநேரம் 3வது, 4வது மற்றும் 5வது ஊதியக் குழுக்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு முறையே 20.6%, 27.6% மற்றும் 31% உண்மையான ஊதிய உயர்வை வழங்கி உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படி கடந்த கால வரலாறுகளை பார்க்கும் போது, 8 வது சம்பள கமிஷனில், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கணிசமான ஊதிய உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
பரிந்துரைகள் என்ன
8வது சம்பள குழுவை உருவாக்குவதற்கு முன்னதாக, தேசிய கூட்டு ஆலோசனை இயந்திர கவுன்சிலின் (NC-JCM) ஊழியர்கள் தரப்பு, புதிய சம்பள குழுவின் குறிப்பு விதிமுறைகளை பற்றிய பரிந்துரையில், "தற்போதைய ஊதிய அமைப்பு,டிஏ மற்றும் பிற சலுகைகள்/வசதிகள், ஓய்வூதியம்/கிராஜுவிட்டி போன்ற ஓய்வூதிய சலுகைகள் மற்றும் பிற முனைய சலுகைகள்" பற்றிய ஆய்வு இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications