இந்திய குடியுரிமை வேண்டாம்.. வெளிநாட்டில் கொத்தாக செட்டில் ஆன மக்கள்! மொத்தம் இவ்வளவு பேரா!
டெல்லி: இந்தியக் குடியுரிமையைத் துறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்படி, இந்தியக் குடியுரிமையை துறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தரவுகளை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். குடியுரிமைத் துறப்பு குறித்த ஆண்டுவாரியான பதிவுகளை அரசு தொடர்ந்து பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து வெளிநாட்டுக் குடியுரிமையை நாடியுள்ளனர். இந்த எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் உச்சத்தை எட்டியுள்ளது.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குடியுரிமை துறந்தவர்களின் ஆண்டுவாரியான புள்ளிவிவரங்களை ராஜ்யசபாவில் சமர்ப்பித்தார். அதன்படி, 2011-ல் 1,22,819 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2020-ல் சற்று குறைந்து 85,256 ஆனது. எனினும், பின்னர் கணிசமாக உயர்ந்து, 2022-ல் அதிகபட்சமாக 2,25,620 ஆகவும், 2023-ல் 2,16,219 ஆகவும், 2024-ல் 2,06,378 ஆகவும் பதிவாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications