கண் திருஷ்டி.. பேஷன் ஷோ..தமிழக எம்பிக்கள் கறுப்பு உடையை கேலி செய்த பிரதமர் மோடி- வெடிக்கும் சர்ச்சை!
டெல்லி: மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டுப் புறக்கணித்ததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் சென்றதை கண் திருஷ்டி, பேஷன் ஷோ என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கேலி செய்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பேசுகையில், இன்று விடைபெறும் உறுப்பினர்களுக்குப் பழைய மற்றும் புதிய கட்டிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அவர்கள் அமிர்த காலம் மற்றும் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் சாட்சியாக அங்கிருந்து திரும்புகிறார்கள் என்றார் பிரதமர் மோடி.

தமிழக எம்பிக்களின் கறுப்பு உடை குறித்து பேசிய பிரதமர் மோடி, நாடு செழிப்பின் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், இந்தச் சம்பவம் நாட்டின் முன்னேற்றத்திற்கான பயணத்திற்குக் 'கறு ப்புப் பொட்டு' மூலம் கண் திருஷ்டியை விரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பண்டைய புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நல்ல சகவாசத்தை வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றும், கெட்ட சகவாசத்தால் சூழப்பட்டவர்கள் குறைபாடுடையவர்களாக ஆகிறார்கள் என்றும் பேசினார் பிரதமர் மோடி.
அத்துடன் ஒரு நதியின் நீர் ஓடும்போது மட்டுமே குடிக்கத் தகுதியானதாக இருக்கும், அது கடலில் கலக்கும்போது உப்பாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கையுடன், தமது உரையை நிறைவு செய்த பிரதமர், ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் வலைதளப் பதிவில், ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் "மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்தபோது நாம் பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தோம்" என பேசியிருந்தார். "நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எது பேஷன் ஷோ” என்று என காட்டமாக எழுதியுள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications