நாடே ஆக்சிஜனுக்கு ஏங்கியுள்ளபோது.. ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி.. ரூ.12,000க்கு விற்ற இரக்கமற்ற நபர்
டெல்லி: நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி ரூ.12,500-க்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக கொடூரமாக உள்ளது.
தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகளையும், 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் நாடு சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினமும் ஏராளமான நோயாளிகள் உயிரை விடுகின்றனர். இதனால் விமானப்படை விமானம் மூலமும், ரயில் மூலமும் அவசர, அவசரமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது.

ஏங்கி தவிக்கும் நோயாளிகள்
''போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் டெல்லியே சீரழிந்து விடும்'' என்று மாநில அரசு மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுள்ளது. இப்படி தலைநகரில் ஒவ்வொரு உயிரும் ஆக்சிஜனுக்கு ஏங்கி தவித்து வரும் நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு நபர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனசாட்சி இல்லாத நபர்
டெல்லியின் தாஷ்ராத்புரி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் தனது வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 67 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
Recommended Video

அதிக விலைக்கு விற்பனை
அனில் குமார் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் அவரிடம் விற்பனை செய்வதற்கான அனுமதியோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. அனில் குமாரை கைது செய்த போலீசார் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications