ஊரெல்லாம் கொரோனா ஆட்டம்.. நம்ம ஆனந்த் மஹிந்திரா காட்டிய குரங்கு வித்தையைப் பாருங்க மக்களே!
டெல்லி: ஊர்ல கொரோனா தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில் எந்த கவலையும் இல்லாமல் குரங்கு ஒன்று டிஷ் ஆன்டென்னாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
குரங்குகள் என்றாலே மனிதர்களை போல் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது, சிரிப்பது, உட்கார்வது, குளிப்பது போன்ற செயல்களை செய்து ஆச்சரியப்படுத்தும். இதை பார்க்கும் போது குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற சொல்வடை நம் நினைவுக்கு வந்து செல்லும்.
அந்த வகையில் குரங்குகளும் அதன் குட்டிகளும் மனிதர்களே வியக்கும் அளவு சில செய்கைகளை செய்யும். தற்போது தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா குரங்கு குறித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படம்
அதில் குரங்கு ஒன்று டிஷ் ஆன்டென்னா குடையில் மிகவும் கச்சிதமாக ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் இருந்தன. இந்த புகைப்படத்திற்கு பொருத்தமான பட வரிகளை அனுப்பும் போட்டியை ஆனந்த் அறிவித்தார். இந்த போட்டியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் அனுப்ப வேண்டும்.

படவரி
இதிலிருந்து இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் ஆங்கிலத்திற்கு, மற்றொருவர் இந்திக்கு. வெற்றி பெறுவோருக்கு மகிந்திரா வாகனம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து அந்த படத்திற்கு ஏராளமானோர் படவரிகளை அனுப்பியுள்ளனர்.

இருவர் தேர்வு
இதுவரை 88 ஆயிரம் பேர் பதில் அனுப்பியுள்ளார்கள். அதிலிருந்து இருவரை ஆனந்த் மகிந்திரா தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியில் வள்ளி சூர்யா என்பவர் அனுப்பிய ஏக் பந்தர்.. டிவி கே அந்தர் என்ற படவரியும், ஆங்கலத்தில் தி சேம் வால் என்ற டிவிட்டர்வாசி அனுப்பிய டிடிஎச்- டைரக்ட் டூ அனுமன்ஜி என குறிப்பிட்டுள்ளார்கள்.

இருவர் வெற்றி
இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் கூறுகையில் இந்த படவரி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் குறித்து அறிவிக்கிறேன். இந்த விளையாட்டு பாஸ்ட்ஸ்ட் பிங்கர்ஸ் பர்ஸ்ட் போட்டியாக இல்லாவிட்டாலும் ஏராளமானோர் பதில் அனுப்பியிருந்தார்கள். அதிலிருந்து இந்த இருவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications