திமுகவின் "ஒன்றிய அரசு" முழக்கத்துக்கு மாஸ் வெற்றி? மத்திய பாஜக அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: மத்திய அரசு தொடர்பான அறிவிக்கைகள், கடிதங்களில் இனி "மத்திய அரசு" என்பதற்கு பதில் இந்திய அரசியல் சாசனத்தின் இடம்பெற்றுள்ள படி "ஒன்றிய அரசு" என பயன்படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2021-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து முதல்வராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' (மு.க.ஸ்டாலின்) பதவியேற்றார். அப்போது முதல் திமுக அரசும் தமிழ்நாடு அமைச்சர்களும் அறிக்கைகள், பேட்டிகள், கட்டுரைகளில் அரசு குறிப்புகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பு அடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது மத்திய அரசு என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என்பதையே பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முதியவர் ஆத்மராம் சரோகி (வயது 84) டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், இந்திய அரசியல் சாசனத்தின் படி "இந்தியா" என்பது மாநிலங்களின் "ஒன்றியமாகும்". ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட "மத்திய அரசு" என்ற சொல்லையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இது இந்திய மாநிலங்களுக்கும் மத்தியில் உள்ள அரசுக்கும் இடையேயான உறவை சீர்குலைக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய பிழையை தொடர்ந்தும் அனுமதிக்காமல் இனி அனைத்து ஆவணங்கள், அறிக்கைகள், கடிதத் தொடர்புகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என்பதை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சர்மா சந்திரா, நீதிபதி சஞ்சீவ் நரூலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமையன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இம்மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்; இது அர்த்தமற்ற பொதுநலன் மனு என சுட்டிக்காட்டினர்.
அப்போது நீதிபதிகள், "மத்திய அரசு" என்று பயன்படுத்த யாரும் தடை விதிக்கவில்லையே.. அப்படி இருக்கும் போது "ஒன்றிய அரசு" என ஏன் பயன்படுத்த வேண்டும் என மனுதாரரை நோக்கி கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய அரசியல் சாசனத்தில் எந்த ஒரு இடத்திலும் "மத்திய அரசு" என்ற சொல்லே கிடையாது. அனைத்து இடங்களிலும் "ஒன்றிய அரசு" என்றுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என வாதிட்டார். இதற்கும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல்










Click it and Unblock the Notifications