'படையப்பா ரஜினி ஸ்டைலில்'.. அசால்டாக தக்காளிகளை டிரக்கில் ஏற்றும் வாலிபர்.. டிரெண்டாகும் வீடியோ!
டெல்லி: லோடுமேன் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் தக்காளிகளை டிரக்கில் ஏற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் நெட்டிசன் ஒருவர் அந்த லோடு மேனுக்கு அர்னால்டு பவரும் ஐன்ஸ்டீனின் மூளையும் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
படிப்பறிவை விட பட்டறிவு மேலானது என்று வயதில் மூத்தவர்கள் சொல்வதை கேள்வி பட்டு இருப்போம்.
என்னதான் படித்து இருந்தாலும் அனுப அறிவும் இருந்தால் தான் எந்த ஒரு செயலிலும் நிபுணத்துவம் பெற முடியும் என்பது பலமுறை கண்கூடாக பலரும் பார்த்து இருக்கக்கூடும்.

அசாத்திய திறன்கள்
இததை மெய்பிக்கும் வகையில் பல வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகின்றன. சாலையோர கடைகளில் வேகமாக தோசை போடுவதாக இருக்கட்டும், கட்டிட வேலைகளின் போது செங்கற்களை கொண்டு போவது என உடல் உழைப்புகளில் கூட தங்களின் அனுபவம் மூலம் அசாத்திய திறன்களை வெளிக்காட்டி பலரது கவனத்தையும் சிலர் ஈர்த்து விடுகின்றனர்.

தனி ஆளாக லாரியில் தூக்கி வீசும்
தற்போது அதேபோலத்தான் ஒரு வீடியோ இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தக்காளி பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கூடையை ஒருவர் தனி ஆளாக லாரியில் தூக்கி வீசும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி பலரையும் வாவ் போட வைத்துள்ளது. 14 நொடிகள் வீடும் அந்த வீடியோவில் தக்காளி தோட்டத்தில் கூடைகளில் தக்காளி பழங்கள் கூடைகளில் வரிசையாக பறித்து வைக்கப்பட்டுள்ளன.

டிரெண்ட் ஆகும் வீடியோ
அதை அருகில் உள்ள டிரக்கில் கொட்டுவதற்கு தயாராக இளைஞர் இருக்கிறார். எப்படியும் இரண்டு பேர் இந்த வேலையை செய்வதற்கு தேவை என்று நாம் எண்ணும் வேளையில், தனி ஒருவராக அவர் மட்டுமே தக்காளி கூடையை லாரி நோக்கி வீசி சிந்தாமல் சிதறாமல் தக்காளிகளை லாரியில் ஏற்றுகிறார். அதிவேகத்திலும்.. அதேநேரத்தில் துல்லியமாகவும் அந்த இளைஞர் தக்காளி பழங்களை லாரியில் ஏற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

அர்னால்டின் பவரும் ஐன்ஸ்டின் மூளையும்
அதிக அளவில் மனித சக்தியை பயன்படுத்தாமல் அறிவியல் முறையில் இந்த இளைஞர் சிறப்பாக பணி செய்வதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். இந்த பதிவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் ''அர்னால்டின் பவரும் ஐன்ஸ்டின் மூளையும்'' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எப்படி துல்லியமாக தக்காளி கூடைகளை வீச முடிகிறது என்று நெட்டிசன்கள் சிலர் சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு மற்றொரு நெட்டிசன், படையப்பா ரஜினிகாந்த் ஸ்டைலில் அசால்ட்டாக அவர் வேலை செய்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

10 ஆம் வகுப்பு வரை
இதற்கு பின்னால் அறிவியல் மறைந்து இருப்பதாகவும் கூடையை சுழற்சி வேகத்தில் விடுவதால் தக்காளி பழங்கள் துல்லியமாக விழுகின்றன என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மைய விலக்கு விசையை புரிந்து கொண்டவராகவும் இருந்தால் அலுவலக வேலை கிடைக்காவிட்டால் இப்படி செய்துவிடலாம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications