வாயில் என்ன?.. ஓங்கி அப்பிய மணப்பெண்.. எழுந்து போய் துப்பிய மாப்பிள்ளை!.. வைரலாகும் வீடியோ!
டெல்லி: திருமண நிகழ்ச்சியின் போது குட்கா மென்ற மணமகனை பளார் விட்டு அதை துப்பிவிட்டு வருமாறு மணமகள் சொன்ன காட்சிகள் வைரலாகி வருகின்றன.
திருமணம் என்றால் மகிழ்ச்சி, புத்தாடைகள், உணவு , கலாட்டா, குடும்பத்தினர் ஒன்றிணைவு என நிகழ்ச்சியே கலைகட்டும். கடந்த காலங்களில் பெண்கள் குனிந்த தலை நிமிராமல் மணமேடைக்கு வருவர்.
தனது நண்பர்களை பார்த்து மெல்ல வெட்க சிரிப்பை உதிர்ப்பர். பின்னர் அவரவர் வழக்கப்படி திருமணம் ஆகும். தனது நண்பர்களையும் உறவினர்களையும் இருவரும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைப்பர்.

திருமணம்
பின்னாட்களில் நிச்சயதார்த்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மணமகனும் மணமகளும் பேசி புரிந்து கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் பிடித்தது, பிடிக்காதது, புரிந்தது புரியாதது, அறிந்தது அறியாதது என அத்தனையும் பேசி பழகுவர். இதற்கடுத்த டிரென்ட் மணமகளை அழைக்கும் போது டான்ஸ் ஆடி கொண்டே வருவார்.

என்ட்ரி சாங்
அந்த நேரத்தில் மம்மட்டியான் பாடல் பிளே செய்தே ஆக வேண்டும். இது போல் தான் வரும் போது தனக்கு பிடித்த பாடலை டிஜே வைக்கவில்லை என ஒரு மணப்பெண் அடம்பிடித்தார். அவரது உறவினர்கள் சமாதானம் செய்தும் அவர் சமாதானம் ஆகவில்லை. அது போல் ஒரு வட மாநில தம்பதியின் திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு ஒரு கிப்டை கொடுத்து உடனே பிரித்து பார்க்க சொன்ன போது அதில் பால்புட்டி இருந்ததை அடுத்து தூக்கி எறிந்து கோபமடைந்தார் மணமகள்.

புகைப்படக் கலைஞர்
அது போல் ஒரு திருமணத்தில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எப்படி நிற்க வேண்டும் என மணமகனுக்கு செய்து காட்டிய போது அவரிடம் தர்ம அடி வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதற்கு மணப்பெண் விழுந்து விழுந்து சிரித்தார். தாலி கட்டும் நேரத்திலும் லேப்டாப்புடன் வொர்க் பிரம் ஹோம் பரிதாபங்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரிய வகையில் ஆனது. இப்படியாக கலாட்டா, கோபம், சிரிப்பு, ஆட்டம் பாட்டம் என களைகட்டும் திருமணத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனை ஓங்கி ஒரு அறைவிட்டார்.

ஆத்திரமடைந்த மணமகள்
மணமகள் அருகில் இருந்த உறவினர் ஒருவர் குட்கா மென்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் அந்த நபரை அடித்துள்ளார். மணமேடையில் உசட்கார்ந்து கொண்டு குட்கா மெல்லுகிறாயா என ஆத்திரமடைந்துள்ளார். உடனே அவர் நான் மட்டுமா மெல்லுகிறேன், மாப்பிள்ளையும்தான் குட்கா மெல்லுகிறார் என போட்டுக் கொடுக்க மணமகளின் பார்வையோ மணமகன் பக்கம் திரும்பியது.

கன்னத்தில் பளார்
வாயில் என்ன என மணமகள் கேட்க அதற்கு மாப்பிள்ளையோ ஒன்னுமில்லை என சொல்ல, மணமகன் கன்னத்திலும் ஒரு பளார் விட்டார். உடனே எழுந்து போய் குட்காவை துப்பிவிட்டுதான் வந்தார். உறவினர்கள் மத்தியில் வருங்கால மனைவி தன்னை அடித்த சம்பவத்தை நினைத்து இனி நாம் எப்படி காலத்தை கழிப்போமோ என்ற பீதியுடன் மணமகன் திருமண சடங்குகளில் ஈடுபட்டார். இது போல் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளையின் வழுக்கை தலையை மறைத்து விக் வைத்து திருமணம் செய்ய முயன்ற போது இதை தாலி கட்டும் நேரத்தில் கண்டுபிடித்தார் மணமகள். அது போல் கண் பார்வை குறைபாடுடைய ஒருவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற மணமகனிடம் தூரத்தில் ஒரு வார்த்தையை காட்டி படித்து காட்டுமாறு மணமகள் டெஸ்ட் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications