டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர் செய்த காரியம்.. லேட்டாகிவிட்டதாம்! பிகினி பெண்ணுக்கு பிறகு வைரல் வீடியோ
டெல்லி: ஓடும் மெட்ரோ ரயிலில் இளைஞர் செய்த காரியத்தை பார்த்த பயணிகள் முகம் சுளித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விமான பயணம், ரயில் பயணம் என்றால் சிலருக்கு எக்ஸ்ட்ரீம் குஷி வந்துவிடும் போல! அதனால்தான் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என தெரியாமல் எதையாவது செய்கிறார்கள். அந்த வகையில் விமான பயணித்தில் பயணி மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளுடன் வாக்குவாதம் செய்வது, விமான பணிப்பெண்களிடம் அத்துமீறுவது உள்ளிட்ட செயல்களை சிலர் செய்து வருகிறார்கள்.

அது போல் விமானத்தில் நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. அது போல் மெட்ரோ ரயிலை எடுத்துக் கொண்டால் அங்கும் நிறைய சம்பவங்கள் சொல்லும்படியாக நடந்துள்ளன.
டெல்லி மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையுடன் வந்த இளம்பெண் சர்ச்சையை கிளப்பியிருந்தார். மெட்ரோ ரயிலில் ஒரு பெண் தனது மடியில் ஒரு பெரிய பையுடன் அமர்ந்திருந்தார். அவர் தனது ஸ்டாப்பிங் வந்ததும் இறங்குவதற்காக முன்கூட்டியே எழுந்து நின்றார். அப்போது எல்லாருடைய பார்வையும் அந்த பெண்ணின் மீது பட்டது.
காரணம் ஜட்டியை போன்ற ஒரு அரைகுறை ஆடையை அணிந்திருந்தார். மேலாடையும் உள்ளாடை போல் இருந்தது. சுருக்கமாக சொல்ல போனால் பிகினியில் அந்த பெண் வந்தது போல் இருந்தது. இது பல பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதில் பயணிகள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் பல் துலக்கியுள்ளார். சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் பல் தேய்த்து கொண்டே ஏதோ வீட்டுக்குள் நடந்து செல்வது போல் கம்பார்ட்மென்டில் நடந்து செல்கிறார்.
அந்த காட்சியை பார்த்த சிலர் வாந்தி எடுக்காத குறையாக குமட்டினர். ஆனால் அந்த இளைஞரோ அது குறித்து எந்த வித சலனமும் இல்லாமல் அவர் பாட்டுக்கு சுற்றி திரிந்து வந்தார். இந்த இளைஞர் தன்னை சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்தாரா என்ற கேள்வியும் எழுந்தது. அரைகுறை ஆடை அணிந்த பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆடை என்பது என் சுதந்திரம் என நீண்ட நெடிய பேட்டியை அளித்திருந்தார்.

அது போல் இனி இந்த இளைஞரையும் யூடியூப் சேனல்கள் மொய்ப்பர் என தெரிகிறது. பொதுவாக அலுவலகத்திற்கு தாமதமானால் ரயிலில் சிலர் தலைவாருவர், சிற்றுண்டி உண்பர், அலுவலக பணிகள் எழுத்து வடிவத்தில் இருந்தால் அதை செய்வர். பெரும்பாலான ரயில்களில் பெண்கள் உணவு உண்ண கூட நேரமில்லாமல் 2 இட்லியை புட்டு வாயில் போட்டபடியே செல்வர். அது போல் வீட்டில் வேலை மிச்சம் என்பதற்காக வீட்டுக்கு செல்லும் போது வாங்கும் கீரைகளை ஆய்ந்து கொண்டே செல்வதுண்டு.
பூண்டு வாங்கினால் அதை உரிப்பது, பூ தொடுப்பது என இப்படித்தான் மக்கள் நேரத்தை மிச்சம் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த இளைஞரோ அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என மெட்ரோ ரயிலில் பல் தேய்கிறார். நாளைக்கு லேட்டாகிவிட்டது என கூறி சோப்பு, தண்ணீர் கொண்டு வந்து குளித்தாலும் குளிப்பாரோ! செய்தாலும் செய்வார் என சமூகவலைதளவாசிகள் கருத்து பதிவிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications