"புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் குரங்கு".. இணையத்தை உலுக்கிய ஒற்றை வீடியோ.. நெகிழும் நெட்டிசன்ஸ்
டெல்லி: புலிக்குட்டிகளுக்கு குரங்கு வகைகளில் ஒன்றான ஒரங்குட்டான் பால் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
Recommended Video
நாடறிந்த தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
மகிந்திரா குழுமங்களுக்கு சொந்தமான இவர் தன்னம்பிக்கையூட்டும் வீடியோக்கள், வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிருவதை வாடிக்கையாக கொண்டவர்.

ஆனந்த் மகிந்திரா வீடியோ
இவருடைய பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்ட் ஆகிவிடும். அசாத்திய திறமையுடன் கூடிய செயல்கள், வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் அதை செய்பவர்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிரும் ஆனந்த் மகிந்திரா, அத்தகைய வீடியோக்களை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி விடுவார். இவருடைய பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் ஒரங்குட்டான்
மனிதக்குரங்குகளில் ஒரு வகையான ஒரங்குட்டான் வகையை சேர்ந்த குரங்கு, புலிக்குட்டிக்கு பால் புகட்டும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. 33 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில், ஒரங்குட்டான் குரங்கு ஒன்று தன்னை சுற்றி நிற்கும் ஒன்றிரண்டு புலிக்குட்டிகளுடன் அலவலாவி மகிழ்கிறது. புலிக்குட்டியை தன் தோள் மீது போட்டு கொஞ்சி மகிழும் ஒரங்குட்டான், புலிக்குட்டி ஒன்றிற்கு புட்டியில் அடைக்கப்பட்ட பாலை, தாய் ஒருவர் தன் குழந்தைக்கு அக்கறை மற்றும் பாசத்தோடு கொடுப்பது போல், பார்த்து பார்த்து அக்கறையோடு அருந்த கொடுக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து
புலிக்குட்டியாக இருந்தாலும் தனது குட்டியை போல பாசம் காட்டி ஒராங்குட்டான் விளையாடி மகிழ்வது நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது. ஆனந்த் மகிந்திரா இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. லைக்குகள், கமெண்டுகள் என பதிவுக்கு கீழே குவிந்து வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் இதுதான் தாய்ப்பாசம் என பதிவிட்டுள்ளனர். இன்னொரு நெட்டிசன் கூறும் போது, ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பதற்கு இதுதான் சரியான உதாரணம். விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.

அனைத்திற்கும் மேலானது
மற்றொரு நெட்டிசன் பதிவிட்ட கருத்தில், இந்த புலிக்குட்டிகள், பழங்களை சாப்பிடும் சைவை உண்ணிகளாக வளரப்போகின்றன என கேலியாக பதிவிட்டுள்ளார். இன்னொருவர் வெளியிட்ட பதிவில், தாய்மை உணர்வுதான் அனைத்திற்கும் மேலானது... இந்த உணர்வு அனைத்தையும் செய்து விடும்..என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு அந்தோஸ்கோபஸ் மினுடஸ் பறவைகள், தனது கூட்டை மிகவும் சாதுர்யமாகவும் பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்கள் புகுந்துவிடாதபடி சாமர்த்தியமாக கட்டி வைத்திருக்கும் பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அதில் வெளியிட்ட பதிவில், 'இயற்கை மிகவும் அசாத்தியமானது. . எங்களின் கார்பரேட் ரிஸ்க் மட்டும் கார்பரேட் ஸ்டேடர்ஜி துறைக்கு இந்த பறவைகளைத்தான் நியமிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி டிரெண்ட் ஆனது குறிப்பிடித்தக்கது.












Click it and Unblock the Notifications