டீ கப்பில் பீர் குடிக்கும் பாஜக! கல்யாணத்துக்கு போனது ஒரு தப்பா? வரிந்து கட்டி களமிறங்கிய காங்கிரஸ்!
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்ட வீடியோ வெளியான நிலையில் பிரதமர் மோடியோ அல்லது பாஜகவோ திருமணத்தில் கலந்துகொள்வதை கூட குற்றம் என கருதுகிறார்களா? எனவும், அதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேபாளத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஓட்டல் இரவு விடுதியில் நடந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளத்துக்கு சென்றதாகவும், திருமணம் முடிந்த பிறகு ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து நிகழ்ச்சி ராகுல் காந்தி கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக விமர்சனம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். சீனாவுடன் சேர்ந்து ராகுல் சதி செய்கிறாரா? என பாஜக மூத்த தலைவர் சிடி ரவி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா, ''காங்கிரஸ் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது. ஆனால் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருக்கிறார்.என்றார்.

காங்கிரஸ் பதிலடி
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா," காத்மாண்டுவில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார் என்றும், எந்த காரணமும் இல்லாமல் ராகுல் காந்தியின் பின்னால் செல்வதை விட இறக்குமதி பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் பாஜகவுக்கு கடுமையாக பேசினார். "ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக காத்மாண்டு வந்துள்ளார். அது அவரது தனிப்பட்ட விஷயம். மின்சார நெருக்கடி, பணவீக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ஏன் பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை என கேட்டார்.

திருமணத்திற்கு போவது குற்றமா?
மேலும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வது நமது கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் விஷயம். இந்த நாட்டில் திருமணம் செய்துகொள்வது, ஒருவருடன் நண்பராக இருப்பது அல்லது அவர்களின் திருமண விழாவில் கலந்துகொள்வது இன்னும் குற்றமாக மாறவில்லை என்றதோடு, பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த சுர்ஜேவாலா, "பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் ராகுல் காந்தி அழைக்கப்படாத விருந்தினராக செல்லவில்லை. நண்பர் ஒருவரின் தனிப்பட்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு ராகுல் காந்தி சென்றார். என்றார்.

மஹுவா மொய்த்ரா தாக்கு
மேலும் அதிரடி பேச்சுகளுக்கு சொந்தக்காரரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பாஜகவினரின் செயல் குறித்து பேசுகையில், தேநீர் கோப்பையில் பீர் அருந்தும் இரட்டை வாழ்கையை நடத்துகிறார்கள் பாஜகவினர். அதனால் தான் ராகுல் காந்தியின் சொந்த நிகழ்ச்சியை கூட தவறான கண்ணொட்டதில் பார்க்கின்றனர்:" என கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications