இனிமேல் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ரயில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக ரயில்வே துறை மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி இனிமேல் ரயில்களில் டிக்கெட் புக் செய்யும்போது முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் லிங்க் செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போதும் ரயில் போக்குவரத்தே முக்கியமான பொதுப் போக்குவரத்து முறையாக இருக்கிறது. ரயில் போக்குவரத்தை இன்னும் மேம்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ரயில் டிக்கெட் புக்கிங்கில் சில சிக்கல்கள் இருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டும் நிலையில், அதைச் சரி செய்யவும் ரயில்வே தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

train IRCTC Aadhaar

மக்கள் புலம்பல்

ரயில் டிக்கெட் புக்கிங் ஓபனாகும் போது ஏஜெண்டுகள் மொத்தமாக டிக்கெட்களை புக் செய்வதாகப் பொதுமக்கள் பலரும் புகாரளித்தனர். போலி கணக்குகளைத் தொடங்கி, அதன் மூலம் டிக்கெட்களை மொத்தமாக புக் செய்து கொள்வதாகவும் இதனால் பொதுமக்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியவில்லை எனப் பலரும் கூறினர். குறிப்பாகப் பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்களில் டிக்கெட்கள் கிடைப்பதே இல்லை எனப் பலரும் புகாரளித்தனர்.

முக்கிய அறிவிப்பு

இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் வகையில் ரயில்வே துறை புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி எந்தவொரு ரயிலாக இருந்தாலும் புக்கிங் தொடங்கி, முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் லிங்க் செய்யப்பட்ட கணக்குகளில் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். ஆதார் லிங்க் செய்யாத ஐஆர்சிடிசி கணக்குகளில் இருந்து முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தட்கல் டிக்கெட்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை இருக்கிறது. அதாவது ஆதார் லிங்க் செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே தட்கல் டிக்கெட் போட முடியும் என்ற விதிமுறை இருக்கிறது. அதைத் தான் இப்போது சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது ரயில்வே! இதன் மூலம் போலிக் கணக்குகள் மூலம் டிக்கெட் புக்கிங் குறையும்.

அறிவிப்பு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "டிக்கெட் புக்கிங் செய்யும்போது முறைகேடுகளைத் தடுக்கவும் பொதுமக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்வதை அனுமதிக்கும் நோக்கில் 1.10.2025 முதல் புக்கிங் தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாரை லிங்க் செய்துள்ள யூசர்கள் மட்டுமே IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளது. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஏஜெண்டுகள், ஆதார் லிங்க் செய்யாதவர்கள் வழக்கம் போல டிக்கெட் புக் செய்யலாம்.

அதிகாரிகள் சொல்வது என்ன

அதேநேரம் ரயில்வே நிலையங்களில் புக் செய்யப்படும் டிக்கெட்களில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அது தற்போதுள்ள நடைமுறைப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கைக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே துறை அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், "முன்னதாக தட்கல் புக்கிங்களுக்கு இதேபோல 15 நிமிடக் கட்டுப்பாட்டை விதித்திருந்தோம். அதற்கு நல்ல பலன்கள் கிடைத்ததால், ஜெனரல் புக்கிங்களுக்கும் அதை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இப்போது முதல் 15 நிமிட புக்கிங்கிற்கு ஆதார் கட்டாயம் என்பதால் இப்போதே அதை லிங்க் செய்து கொள்ளுங்கள். பிறகு அவசரத்தில் புக் செய்யும்போது லிங்க் செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+