லாஸ்ட் “டுவிஸ்ட்”.. பெங்களூருவில் நாளை எதிர்க்கட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் மறைமுகமாக சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி சம்மதித்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் 2 வது முறையாக கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் உள்ள மோடி அரசின் பதவிகாலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது.

Aam Aadmi announced that they attend bangalore opposition meeting tommorrow

2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே இறங்கி உள்ளன. மத்தியில் 3 வது முறையாக பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து உள்ளன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் போட்டியிட ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட பாஜக கூட்டணியில் இல்லாத பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த ஓராண்டில் பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார்.

Aam Aadmi announced that they attend bangalore opposition meeting tommorrow

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரை அவர் சந்தித்து பேசி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் நிதீஷ் குமார் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால், திரிணாமூல் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. பாட்னா கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில் நாளையும் நாளை மறுநாளும் 2 வது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, பெங்களூரு கூட்டத்தில் தங்கள் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சேவைகள் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் மறைமுகமாக சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி சம்மதித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+