‛ஒரு சீட் மட்டும் தான்’.. காங்கிரசுக்கு வெல்லும் தகுதியே இல்லை.. டெல்லியில் ‛செக்’ வைக்கும் ஆம்ஆத்மி
டெல்லி: மம்தா பானர்ஜியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் ஒன்றும் அவ்வளவு ‛வொர்த் இல்லை’ அந்த கட்சிக்கு டெல்லியில் ஒரு தொகுதி மட்டும் தான் கொடுக்க முடியும் என ஆம்ஆத்மி தலைவர் கறாராக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அநேகமாக அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தேர்தல் நடக்கலாம்.

இந்நிலையில் தான் மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது. வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 400 தொகுதிகளில் வெல்லும் நோக்கத்தில் திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 25 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். அதேபோல் உத்தர பிரதேசத்தில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்த ஆர்எல்டி கட்சி பாஜக பக்கம் சாய்ந்துள்ளது. மேலும் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் தனித்தே போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அதேபோல் தான் ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதி மற்றும் தலைநகர் சண்டிகர் நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 14 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது பஞ்சாப் மாநிலம் மற்றும் சண்டிகரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது. இதனை அரவிந்த் கெஜ்ரிவாலும் சமீபத்தில் உறுதி செய்தார்.
இத்தகைய சூழலில் தான் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் வகுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இருப்பினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.
இதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் ஆம்ஆத்மி உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளாராம்.
இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பியான சந்தீப் பதக் கூறுகையில், ‛‛மேலும் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு எம்பி, எம்எல்ஏ கூட இல்லை. மாநகராட்சியை பொறுத்தமட்டில் 250 வார்டில் 9 பேர் மட்டுமே காங்கிரஸ் கவுன்சிலர்களாக உள்ளனர். இதனால் தகுதியின் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெல்லும் வாய்ப்பு என்பது இல்லை.
ஆனால் கூட்டணியின் தர்மத்தை மனதில் வைத்து நாங்கள் அவர்களுக்கு ஒரு இடத்தை வழங்குகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களிலும் போட்டியிடும்’’ என்றார். டெல்லியை பொறுத்தமட்டில் ஆம்ஆத்மி-காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது 4:3 என்ற அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
‛‛14 தொகுதிகளில் தனித்து தான் போட்டி’’.. காங்கிரசுடன் கூட்டணியில்லை.. உறுதியாக சொன்ன கெஜ்ரிவால்
அதாவது டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதியில் ஆம்ஆத்மி 4 தொகுதியிலும், காங்கிரஸ் 3 தொகுதியிலும் போட்டியிடும் என பேசப்பட்டது. இருப்பினும் தொகுதி பங்கீடு என்பது முடிவு வராமல் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஆம்ஆத்மி கட்சியின் எம்பி சந்தீப் பதாக் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே வழங்கப்படும் எனக்கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இதனால் டெல்லியிலும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி இடையேயான கூட்டணி நிலைக்குமா? இல்லாவிட்டால் பஞ்சாப்பை போல் ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தனித்து களம் காணுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications