சட்டசபையை கூட்ட அனுமதி மறுத்த பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- உச்சநீதிமன்றம் மறைமுக கண்டனம்!
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் மறைமுகமாக குட்டு வைத்துள்ளது.
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி வழங்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் பன்வாரிலால்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் பன்வாரிலால். அம்மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கொண்டிருந்தார். அதன்பின்னர் தற்போதைய ஆம் ஆத்மி அரசுடனுடம் பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதி வருகிறார் பன்வாரிலால் புரோஹித்.
அண்மையில் பயிற்சி ஒன்றுக்கு பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் தேர்வு குறித்து தமக்கு விளக்கம் தர வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் முதல்வர் பகவந்த் மான், மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்தான் ஆளுநர். ஆகையால் ஆளுநருக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பதிலளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பன்வாரிலால் புரோஹித், 15 நாட்களுக்குள் எனக்கு பதில் தர வேண்டும். இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அப்போதும் விடாத முதல்வர் பகவந்த் மான் தமது ட்விட்டர் பக்கத்தில், 3 கோடி பஞ்சாப் மக்களுக்குதான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். மத்திய அரசின் நியமன ஆளுநருக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ந் தேதி கூட்டுவதற்கு மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுவரை மாநில சட்டசபையை கூட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடையே கடிதப் போர் நடைபெற்றும் வருகிறது.

ஆளுநரின் இந்தப் போக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ஆளுநர் என்பவர் மாநில அரசின் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சரவை முடிவின் படி சட்டசபையை கூட்ட வேண்டியது ஆளுநர் கடமை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைமுகமாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, பஞ்சாப் சட்டசபையை மார்ச் 3-ந் தேதி கூட்ட ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுத்திருக்கிறார் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications