சாவர்க்கரின் சீடர்கள் அல்ல நாங்கள்.. சிறை செல்ல அஞ்சமாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்த பகத் சிங்கை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் சிறை செல்ல அஞ்ச மாட்டோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தேர்தல் வெற்றிக்கு பின் ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பாஜகவை தீவிரமாக ஆம் ஆத்மி எதிர்த்து வருகின்றனர். இதனிடையே டெல்லி துணைநிலை ஆளுநர் - ஆம் ஆத்மி இடையிலான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் தனியார் மதுபான உற்பத்தியாளர்களும், தனிநபர்களும் அதிக லாபமடைவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவின் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே சிறையில் இருக்கிறார். இதேபோல் விரைவில் கலால்துறை அமைச்சராக இருக்கும் மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படலாம்.
ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் தான் பாஜகவினர். ஆனால் நாங்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைய மறுத்து உயிரை தியாகம் செய்த பகத் சிங்கை பின்பற்றுபவர்கள். எப்போதும் சிறை செல்வதற்கு அஞ்சியதில்லை. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஆம் ஆத்மி மாபெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. நாங்கள் தேசியளவில் உயர்வதை பாஜகவால் பார்க்க முடியவில்லை. அதனால், அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுக்கின்றனர். ஆனால், இது எதுவும் எங்களைத் தடுக்காது.
நாட்டில் இப்போது ஒரு புதிய அமைப்பு உருவாகியுள்ளது. யாரை சிறைக்கு அனுப்புவது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். பிறகு, ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு முன்வைக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications