2024 லோக்சபா தேர்தல்.. காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி! ஆம் ஆத்மி அதிரடி! தயக்கம் காட்டும் காங்.! ஏன்
டெல்லி: அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயார் என்று ஆம் ஆத்மி குஜராத் தலைவர் அறிவித்துள்ளார்.
நமது நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், இதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

காங்கிரஸுடன் முரணாக இருந்த திரிணாமுல், ஆம் ஆத்மியும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தே எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
கூட்டணி: இதனிடையே அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி குஜராத் பிரிவுத் தலைவர் இசுதன் காத்வி இது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "இந்தியா" கூட்டணியில் உள்ள இரு எதிர்க்கட்சிகளும் இணைந்து குஜராத்தில் போட்டியிடும் என அவர் அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இசுதன் காத்வி, "ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் "இந்தியா" கூட்டணியில் உள்ளன. குஜராத் மாநிலத்திலும் நிச்சயம் இந்த கூட்டணி இணைந்தே போட்டியிடும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் அடுத்து நடக்கும் லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவது உறுதி. குஜராத் மாநிலத்தில் சீட் ஷேரிங் செய்து இரு கட்சிகளும் போட்டியிடும்.
இதில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த முறை குஜராத்தில் 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற முடியாது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். லோக்சபா தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று இப்போதே தேர்வு செய்யும் பணிகளையும் நாங்கள் தொடங்கிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ்: ஆம் ஆத்மி இப்படி அடித்துச் சொன்னாலும் கூட காங்கிரஸ் இதில் இன்னும் உறுதியாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் இப்படிப் பேசியுள்ளது குறித்து கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்தெல்லாம் டெல்லி தலைமையை முடிவு செய்யும் என்று காங்கிரஸின் மணீஷ் தோஷி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இப்போது தான் எனக்கு இது குறித்துத் தெரியும்.. சீட் பகிர்வு குறித்து எல்லாம் டெல்லி தலைமை தான் இறுதி முடிவை எடுக்கும்..தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முடிவு செய்வது தான் அனைவருக்கும் நல்லது. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவையே குஜராத் காங்கிரஸ் பின்பற்றும்" என்று அவர் தெரிவித்தார்.
பாஜக: இதற்கிடையே இதற்கு பாஜக கடும் பதிலடி கொடுத்துள்ளது.. ஆம் ஆத்மி கட்சியைக் காங்கிரஸின் பி டீம் என்பதையே இது உறுதி செய்வதாகக் குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ருத்விஜ் படேல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற கூட்டணிக்கு எல்லாம் பயப்படாது.. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பி டீம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என 3 கட்சிகளும் களத்தில் இருந்தன. இதில் காங்கிரஸ் 17 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் 156 இடங்களில் வென்று மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்போது முதல்வராக பூபேந்திர படேல் இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications