அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிக்சை.... அப்படின்னா? விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்
Recommended Video

டெல்லி:டெல்லி ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளனர். 2 நாள் சிகிச்சைக்கு பின்னர்... அது தொடர்பான விவரங்கள் மத்திய அரசு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் விமானப் படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.
இந் நிலையில், பலர் அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பதாக கூறினார்.

மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து நேற்று பாகிஸ்தான் ராணுவத்தால் உடல் பரிசோதனைக்கு பிறகு அபிநந்தன் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்கள் சிகிச்சை
அபிநந்தனின் முகம், கன்னம் மற்றும் கைகளில் காயம் இருப்பதால் அதற்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதே நேரத்தில் அபிநந்தனின் மனதையும், உடல்நலத்தையும் பேண கூலிங் டவுன் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூலிங் டவுன் சிகிச்சை என்பது... மனதையும், மன நலத்தையும் பேணுவதற்காக அளிக்கப்படும் சிகிச்சையாகும்.

கூலிங் சிகிச்சை
வழக்கமானதாக கருதப்படும் இந்த சிகிச்சை விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்படும். அபிநந்தனுக்கு அளிக்கப்பட்ட இந்த சிகிச்சையில் அவர் முன்னேற்றம் அடைந்தாரா..? அவரது உடல் மற்றும் மனநிலை எவ்வாறு உள்ளது என்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

மனநல சிகிச்சை
அதனை தொடர்ந்து அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications