Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயில் எழுதவில்லை என்றாலும்.. தந்தை சொத்தில் மகளுக்கு பங்கு உண்டு: உறுதி செய்த உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துகளைப் பெற மகள்களுக்கு முழு உரிமை உள்ளது என‌ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தையின் சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துகள் முறையாக உயில் எழுதாமல் விடும்போது, வாரிசு என்ற முறையில் மகள்களுக்கு முழு உரிமை உள்ளது என மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 51 பக்கம் தீர்ப்பு எழுதி உத்தரவிட்டுள்ளது.

தந்தை சுயமாக சம்பாதித்த சொத்துகளோ அல்லது பரம்பரை சொத்துகளில் மகள்களுக்கும் பங்கு இருப்பதை தந்தை உயில் எழுதி இருப்பார்.. ஒருவேளை உயில் எழுதாத நிலையில் தந்தை இறந்துவிட்டால் பெண்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

வழக்கு

வழக்கு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று நீதிபதிகள் அப்துல் நசீர் , கிருஷ்ண முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''இந்து வாரிசு உரிமை சட்டப்படி, தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்த பரம்பரை சொத்தில் பங்கு பெற, வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது.

 வாரிசு

வாரிசு

தந்தை இறந்ததும், சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களைவிட, இந்து வாரிசு உரிமை சட்டத்தின் கீழ், தந்தையின்நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு, இந்து பெண்கள்,விதவைப் பெண்களின் சொத்துரிமையுடன் தொடர்புடையது. இறந்த தந்தை உயில் எழுதி வைக்கவில்லை என்பதற்காக, அவர்களது சொத்துரிமையை மறுக்க முடியாது. தந்தையின் சொத்து மகள்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

உரிமை

உரிமை

அதுதவிர‌சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லை என்று கூறி, அதை வேறு யாருக்கும் வழங்க முடியாது. ஒரு விதவை அல்லது மகளுக்கு தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது பரம்பரை மரபுரிமையாக பெறுவதற்கான உரிமை என்பது பழைய பாரம்பரிய இந்து சட்டத்தின் கீழ் உள்ளது. அதோடு, இதுகுறித்து பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இதையே அங்கீகரித்துள்ளன'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 51 பக்க தீர்ப்பை எழுதி உத்தரவிட்டுள்ளனர்.

 பெண்களுக்கு சொத்து

பெண்களுக்கு சொத்து

1956, ஜூலைமாதம் நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது. தற்போது தந்தை உயில் எழுதாமல் விட்டாலும் பெண்களுக்கு சொத்தில் முழு உரிமை உள்ளது என தீர்ப்பு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+