லோக்சபாவுக்கு வராத திமுக எம்பி எஸ்ஆர் பார்த்திபன் சஸ்பெண்ட்- கொந்தளிப்பால் பின்வாங்கிய மத்திய அரசு!
டெல்லி: நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இன்று பங்கேற்காத திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலில் இருந்து எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று திடீரென சிலர் உள்ளே நுழைந்து புகை குப்பிகளை வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபாவுக்குள்ளும் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதனை முன்வைத்து இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் முதலில் ஜோதிமணி உள்ளிட்ட 5 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கனிமொழி உட்பட மேலும் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் 15 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
A total of 13 MPs have been suspended from the Lok Sabha today.
— ANI (@ANI) December 14, 2023
SR Parthiban's suspension was revoked after he was mistakenly suspended. pic.twitter.com/3wCxOI9NJK
இந்த நிலையில் லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பிக்களில் திமுகவின் எஸ்.ஆர். பார்த்திபன் எம்பி பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவே இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்திருந்தார். இதுவும் புதிய சர்ச்சையாக வெடித்தது. லோக்சபாவில் இல்லாத ஒரு எம்பி, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி எப்படி சஸ்பெண்ட் செய்ய முடியும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டது. மொத்தம் 13 எம்.பிக்கள் மட்டுமே லோக்சபாவில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்பட்டியலில் இருந்து எஸ்.ஆர். பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்றார். இதனால் இந்த சர்ச்சை ஓய்ந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications