நிர்மலா சீதாராமன் குட்நியூஸ்.. இனி வருமான வரி விதிக்கப்படாது.. விபத்து இழப்பீடு அடியோடு மாறுது
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இன்று அறிவித்த விபத்து காப்பீடு தொடர்பான ஒரு அறிவிப்பு மிகப்பெரிய நன்மையை பொதுமக்களுக்கு வழங்க போகிறது. விபத்து இழப்பீட்டுத் தொகைக்கான 'வட்டி'க்கு இனி வருமான வரி விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீடு தொடர்பான ஒரு பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தால் , பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான 'வட்டி'க்கு இனி வருமான வரி விதிக்கப்படாது என்றும், அந்த வட்டித் தொகையில் இனி டி.டி.எஸ் பிடிக்கப்பட மாட்டாது என்றும் நான் முன்மொழிகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.

அறிய வேண்டியவை:
பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகிறது. நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் போது, அந்த இடைப்பட்ட காலத்திற்கான வட்டியையும் சேர்த்து வழங்கும்.
முன்பு இருந்த நிலை
விபத்துக்கான அசல் இழப்பீட்டுத் தொகைக்கு வரி கிடையாது. ஆனால், அந்தத் தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், அந்த வட்டித் தொகை ₹50,000-க்கு மேல் இருந்தால், நீதிமன்றமே 10% TDS பிடித்துக் கொண்டுதான் மீதிப் பணத்தைத் தருவார்கள்.
புதிய அறிவிப்பு
இனி விபத்து இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து வரும் வட்டி முழுமைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இனி வட்டித் தொகையில் ₹1 கூட TDS பிடிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழுத் தொகையும் எந்தப் பிடித்தமும் இன்றி கைக்கு வரப்போகிறது,
விபத்தால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் பெற வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையில் வரியைக் குறைப்பது ஒரு பெரிய மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
டேர்ம் இன்சூரன்ஸ்
விபத்து காப்பீடு ஒருபுறம் எனில், டேர்ம் இன்சூரன்ஸ் போடுவதும் நல்லது. நீங்கள் வருடத்திற்கு வெறும் ₹10,000 முதல் ₹15,000 வரை கட்டினால் கூட, உங்கள் குடும்பத்திற்கு ₹1 கோடி வரையிலான பாதுகாப்பு கிடைக்கும்.இது சேமிப்புத் திட்டம் அல்ல. எனவே, பாலிசி கால முடிவில் நீங்கள் உயிருடன் இருந்தால் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. அதேநேரம் நீங்கள் கட்டும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். கூடுதல் பிரீமியம் செலுத்தி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் (Critical Illness) அல்லது விபத்து மரணம் ஆகியவற்றுக்குக் கூடுதல் கவரேஜ் சேர்த்துக்கொள்ள முடியும்.
உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் (மனைவி, பிள்ளைகள், பெற்றோர்) இருக்கிறது என்றால், நீங்கள் கண்டிப்பாக ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். குறிப்பாக வீட்டுக்கடன் (Home Loan) அல்லது பிற கடன்கள் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications