டெல்லியில் நடந்தது என்ன... தீப் சித்துவிடம் கிடுக்குப்பிடி... செங்கோட்டை அழைத்து சென்று விசாரணை!
டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 2 பேரை செங்கோட்டைக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
குடியரசு தினத்தில் அவர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்தது எப்படி? அங்கு எங்கு என்னென்ன செய்தனர்? என்பது குறித்து செயல்முறை விசாரணை நடந்தது.
குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி திசைமாறியது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

குவியும் ஆதரவு
இதற்க்கிடையே குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி திசைமாறியது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.இதனால் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். டெல்லியே பதற்றமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். டெல்லியில் அன்று நடைபெற்ற கலவரத்துக்கு, பஞ்சாபி நடிகர் தீப் சித்துதான் காரணம் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தீப் சித்து கைது
டெல்லி செங்கோட்டையில் அவர் காலிஸ்தான் கொடியையும் ஏற்றியதாக புகார் கூறப்பட்டது. இதற்கிடையே டெல்லி போலீஸாரால் தீப் சித்து மீது வழக்கு பதியப்பட்டது.தலைமறைவாக இருந்த தீப் சித்து சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதேபோல் வன்முறையில் தொடர்புடைய இக்பால் சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டைக்கு அழைத்து சென்று விசாரணை
இந்த நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தீப் சித்து மற்றும் இக்பால் சிங் ஆகிய இருவரையும் செங்கோட்டைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். குடியரசு தினத்தில் அவர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்தது எப்படி? அங்கு எங்கு என்னென்ன செய்தனர்? என்பது குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்க கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications