ஒரே நாளில் பிறந்ததினம்: 2ம் வகுப்பு படிக்கும்போது கடிதம் எழுதிய விவேக்.. பதில் போட்ட இந்திரா காந்தி
டெல்லி: தனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரேநாளில் பிறந்ததினம் என 2ஆம் வகுப்பு படித்த போது நடிகர் விவேக் எழுதிய கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பதிலளித்துள்ளார். அதை விவேக்கும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
சின்ன கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக், நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி அருள்செல்வியும், இரு மகள்களும் உள்ளனர்.

நகைச்சுவை
தனது சமூக கருத்துகள் மூலம் நகைச்சுவையை கொடுத்த இந்த மாமனிதரின் காரிலும் வீட்டிலும் விவேகானந்தரின் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அது போல் அப்துல் கலாம் மீதான பற்றால் அவர் கூறிய படி 1 கோடி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதுவரை 33 லட்சம் மரங்களை அவர் நட்டுள்ளார்.

கடிதம்
அது போல் பட்டு போன மரங்களுக்கு புத்துயிரும் அளித்துள்ளார். அத்தகைய கலைஞன் விவேக் தான் 2ஆவது படிக்கும் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் படித்த போதுதான் இந்திராவுக்கு கடிதம் எழுதி அதற்கான பதில் கடிதத்தையும் பெற்றுள்ளார்.

பத்திரப்படுத்திய விவேக்
அந்த கடிதத்தில் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரது தந்தையின் ஒப்புதலோடு எழுதியதில், தனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் (நவம்பர் 19) என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்திற்கு இந்திரா காந்தி தனது கைப்பட எழுதிய பதில் கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகர் விவேக்.

பதில்
கடந்த 1969 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் 2ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் விவேக். இந்த பள்ளியின் முகவரிக்கே இந்திரா காந்தியும் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications