அதானி எண்டர்பிரைசஸ் 2026 முதல் அரையாண்டு முடிவுகள் அறிவிப்பு!
டெல்லி: அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2026 நிதியாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம், AI டேட்டா சென்டர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 44,281 கோடியாக உயர்ந்துள்ளது. EBITDA கூட ரூ. 7,688 கோடியாகப் பதிவாகியுள்ளது. வரிக்கு முந்தைய லாபமும் ரூ. 2,281 கோடியாக உள்ளது. அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் (AAHL) EBITDA முந்தைய ஆண்டை விட 51% அதிகரித்து ரூ. 2,157 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் விமான நிலைய பிஸ்னஸ் காலாண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி வருகிறது.

அதானி
கடந்த அக்டோபர் 8ம் தேதி திறந்து வைக்கப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டிற்கு வரும். மேலும், நானாசா-பிட்கான் திட்டத்திற்கான பிசிஓடி (PCOD) ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதன் மூலம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இயக்கும் சாலைகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
புதிய முதலீடுகள்
புதிய முதலீடுகளின் ஒரு பகுதியாக, சாலை பிரிவில் மூன்று திட்டங்களுக்கும், நீர் பிஸ்னஸில் இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆர்டர் புக் ரூ. 19,982 கோடியாக உயர்ந்துள்ளது. அதானிகனெக்ஸ் (AdaniConnex) நிறுவனம் கூகுளுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர் வளாகத்தை உருவாக்க உள்ளது.
சொத்து மேனேஜ்மென்ட்
அதானி நிறுவனத்தின் நிதி நிலைமையை மேலும் வலுப்படுத்த, ரூ. 25,000 கோடி மதிப்பில் Rights Issueஐ வெளியிட அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குப் பெரியளவில் கை கொடுக்கும்.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL), செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. அதில் தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பை விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் 7வது சாலைத் திட்டத்தின் நிறைவு ஆகியவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரிய அளவிலான திட்டங்களைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தும் நிறுவனம் என்பதையும் அதானி நிறுவனம் மீண்டும் நிரூபித்துள்ளது.
வளர்ந்து வரும் முக்கிய உள்கட்டமைப்பு பிஸ்னஸ்கள், அரையாண்டு EBITDAவில் ரூ. 5,470 கோடியை எட்டியுள்ளன. அதாவது கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் 5% உயர்ந்துள்ளது. தற்போது மொத்த EBITDAவில் 71% பங்களிக்கிறது.
இது தொடர்பாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறுகையில், "சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி நிறுவனமாகத் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா, இந்தியாவின் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைவதோடு, தேசிய வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது.. விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் சாலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.
கூகுளுடன் இந்தியாவின் மிகப் பெரிய AI டேட்டா சென்டருக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை மூலம் நிலையான, தொழில்நுட்பத்தால் இயங்கும் எதிர்காலத்தை நோக்கி இந்தியாவின் மாற்றத்தைத் துரிதப்படுத்துகிறோம். எங்கள் பங்குதாரர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்கி, உலகத்தரம் வாய்ந்த பிஸ்னஸ்களை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்
மாட்யூல் விற்பனை தொடர்ந்து காலாண்டுக்கு 1 GWஆக உள்ளது. 2026 நிதியாண்டின் முதல் அரையாண்டில் உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 43% அதிகரித்துள்ளது. ANIL விண்ட் பிரிவு, 2025ஆம் ஆண்டுக்கான அப்பெக்ஸ் இந்தியா பாதுகாப்பு பிரிவில் "கோல்டன் விருது" பெற்றுள்ளது.
அதானிகனெக்ஸ் பிரைவேட் லிமிடெட் (ACX - டேட்டா சென்டர்)
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப் பெரிய AI டேட்டா சென்டர் வளாகத்தை உருவாக்கக் கூகுளுடன் இணைந்துள்ளது. ஹைதராபாத் டேட்டா சென்டர் இரண்டாம் கட்ட பணிகள் ~96% நிறைவடைந்துள்ளன. புனே டேட்டா சென்டர் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் ~90% முடிந்துள்ளன.
அதானி வாட்டர் லிமிடெட்
இரண்டு புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளது.. பிராமணி நதியில் பிராமணி தடுப்பணையைக் கட்டி நிர்வகிப்பது மற்றும் மோர் சாகர் செயற்கை நீர்த்தேக்கத்தைக் கட்டி நிர்வகிப்பதாகும்.
அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்
கிரீன்ஃபீல்ட் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த காலாண்டில் 7 புதிய வழித்தடங்கள், 8 புதிய விமானங்கள் மற்றும் 1 புதிய விமான நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையம், 2025ஆம் ஆண்டுக்கான இந்தியா சரக்கு விருதுகளில் "டிஜிட்டல் மயமாக்கலுக்கான சிறந்த விமான நிலையம்" விருதைப் பெற்றுள்ளது.
அதானி சாலைப் போக்குவரத்து லிமிடெட்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் HAM திட்டமான "நானாசா-பிட்கான்"க்கான தற்காலிக ஆபரேஷன் தேதி பெறப்பட்டுள்ளது. இது ஏழாவது செயல்பாட்டுத் திட்டமாக உள்ளது. மேலும், மூன்று புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுள்ளது. சோன்பிரயாக் மற்றும் கேதார்நாத் இடையே 12.9 கிமீ நீள ரோப் கார் திட்டம், முங்கர்-சுல்தாங்கஞ்ச் மற்றும் சுல்தாங்கஞ்ச்-சபூர் சாலைகளை இணைக்கும் இரண்டு HAM சாலைத் திட்டங்களும் இதில் அடங்கும்.
ESG சிறப்பம்சங்கள்
நிலையான வளர்ச்சிக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, 2025 ஆம் ஆண்டுக்கான டிரான்ஸ்பார்மன்ஸ் ESG விருதுகளில் அதானி எண்டர்பிரைசஸ் "சிறந்த இந்திய ESG நிறுவனம்" விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் ஆஃப்-கிரிட் பசுமை ஹைட்ரஜன் பைலட் திட்டத்திற்குத் தலைமை தாங்கியதற்காக இந்திய வர்த்தகச் சபையால் ANIL-க்கு "வட்டப் பொருளாதாரத்திற்குச் சிறந்த பங்களிப்பு" விருது வழங்கப்பட்டுள்ளது. அதானி நேச்சுரல் ரிசோர்சஸ், இந்திய வர்த்தகச் சபையால் "காலநிலை நடவடிக்கை" விருதைப் பெற்றுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications