இந்தியாவிலேயே விமான உற்பத்தியை ஆரம்பிக்கும் அதானி.. எம்பிரேயர் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம்
டெல்லி: இந்தியாவில் ஒரு மிகப் பெரிய விமான உற்பத்தி மையத்தை உருவாக்கும் முயற்சியில் அதானி குழுமம் இறங்கியுள்ளது. இதற்காக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் மற்றும் பிரேசில் நாட்டின் எம்பிரேயர் நிறுவனங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இறுதி அசெம்பிளி லைன் (FAL) அமைத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இருக்கும்.
இந்தியா மிக வேகமாக வளரும் விமான போக்குவரத்தை மார்கெட்டை கொண்ட நாடாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விமான போக்குவரத்து சீராக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவிலேயே விமான உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் முக்கிய ஒப்பந்தத்தை அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் மற்றும் பிரேசில் நாட்டின் எம்பிரேயர் நிறுவனங்கள் போட்டுள்ளனர்.

விமான போக்குவரத்து
இரண்டாம் மற்றும் 3ம் நிலை நகரங்களுக்கான விமான இணைப்பு மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவை ஒரு பிராந்திய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும். இது தொடர்பான விழா டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்றது.
முக்கிய ஒப்பந்தம்
அதில் இவ்விரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி எம்பிரேயரின் பிராந்திய விமானங்களுக்கான இறுதி அசெம்பிளி லைனை (FAL) இந்தியாவிலேயே அமைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒரு பிராந்திய விமான உற்பத்தி மையம் அமையும் என அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் இயக்குநர் ஜீத் அதானி தெரிவித்தார். உற்பத்தி மையம் எங்கு அமையும் என்பது அடுத்த சில மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என ஜீத் அதானி குறிப்பிட்டார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் வலுவான நிலையில் உள்ள அதானி குழுமம், இதன் மூலம் விமான உற்பத்தியில் நுழைகிறது. எம்பிரேயர் நிறுவனம் 150 வரையிலான சீட்களை கொண்ட ஜெட் விமானங்களை உருவாக்குவதில் அனுபவம் கொண்டது.
இத்திட்டத்திற்கான முதலீடுகள் மற்றும் எங்கு அமைகிறது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் சமீர் குமார் சின்ஹா, "இது வெறும் விமான அசெம்பிளியை மட்டும் கொண்டதல்ல. தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, வலுவான விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியா நம்பகமான ஒரு உற்பத்தி மையமாக மாறும்" என்றார்.
சரியான தருணம்
நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம மோகன் நாயுடு, எம்பிரேயர் நிறுவனம் இந்தியாவுக்கு வர இதுவே சரியான நேரம்" என்று தெரிவித்தார். பிராந்தியப் போக்குவரத்து விமானங்களுக்கான தேவை தற்போது வலுவாக இருப்பதாகவும் அமைச்சர் ராம மோகன் நாயுடு கூறினார். பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை இது வழங்கும் என்றும் இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்திற்கான விமானங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதானி குழுமம் உடனான இம்முயற்சி, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எம்பிரேயருக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும்.. செலவு குறைந்த பிராந்திய ஜெட் விமானங்களை வழங்க முடியும். இந்த டீலை நாட்டின் 'ஆத்ம நிர்பர்தா' (சுயசார்பு) இலக்கில் ஒரு "முக்கிய திருப்புமுனை" என்று அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் தலைவர் ஆஷிஷ் ராஜ்வன்ஷி குறிப்பிட்டார்.
ஏன் முக்கியம்
எம்பிரேயரின் E-ஜெட்ஸ் விமானங்கள் 2005 முதல் இந்தியாவில் இயங்குகின்றன. இந்திய விமானப்படை, அரசுத் துறைகள், வணிக ஜெட் இயக்குபவர்கள் மற்றும் ஸ்டார் ஏர் போன்றவற்றை இந்திய விமானங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இப்போது சுமார் 50 எம்பிரேயர் விமானங்கள் தற்போது உள்ளன.
இந்திய மார்கெட்டில் அடுத்த 20 ஆண்டுகளில், 80 முதல் 146 இருக்கைகள் கொண்ட விமானங்கள் குறைந்தது 500 தேவைப்படும் என எம்பிரேயர் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications