ரூ.63 ஆயிரம் கோடி.. 30,000 வேலைவாய்ப்பு.. அசாமில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் அதானி
டெல்லி: அதானி குழுமம் அசாமில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ. 63,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஒரு அனல்மின் நிலையம் மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்கள் தொடங்க இந்த முதலீடானது செய்யப்படுகிறது. இதன் மூலம் அசாமுக்கு ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதோடு, சுமார் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி பவர் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் உற்பத்தி நிறுவனம் ஆகும். 12 அனல்மின் நிலையங்கள் மற்றும் ஒரு சூரிய மின் நிலையத்திலிருந்து தற்போது 18.15 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. 2031-32 ஆம் ஆண்டிற்குள் மொத்த உற்பத்தி திறனை சுமார் 42 ஜிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு கொண்டு செயல்பட்டு வருகிறது.

63 ஆயிரம் கோடி முதலீடு
அந்த வகையில் தான் தற்போது வடகிழக்கு மாநிலமான அசாமில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அதானி பவர் நிறுவனம் 3,200 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்காக சுமார் ரூ. 48,000 கோடியும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 2,700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களுக்காக சுமார் ரூ. 15,000 கோடியும் அசாம் மாநிலத்தில் முதலீடு செய்யவுள்ளன.
இந்த முதலீடுகள் அசாம் அரசுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (LoA) ஒரு பகுதியாகும். இந்தியாவின் முன்னணி தனியார் துறை உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தளமான அதானி குழுமத்தின் இந்த திட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இது இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய தனியார் துறை முதலீடாகும்.
அதானி பவர் நிறுவனம், ரூ. 6.30/kWh என்ற மிகக் குறைந்த கட்டணத்தை முன்வைத்து ஒரு கடுமையான போட்டிக்கு பிறகு ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்த நிறுவனம் 3,200 மெகாவாட் திறன் கொண்ட பசுமை அனல்மின் நிலையத்தை 'டிசைன், பில்ட், பைனான்ஸ், ஓன் அண்ட் ஆப்பரேட் (DBFOO)' மாதிரியின் கீழ் அமைக்கும்.
30,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்
இந்திய அரசின் SHAKTI கொள்கையின் கீழ் இந்த மின் நிலையத்திற்கான நிலக்கரி ஒதுக்கீடானது பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கட்டுமான கால பணியின் போதே சுமார் 20,000 முதல் 25,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளையும், செயல்பாட்டு காலத்தில் சுமார் 3,500 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 2030 டிசம்பரில் இருந்து படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
அசாமின் வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் வீட்டுத் தேவைகளுக்கு நம்பகமான மற்றும் திறமையான மின்சாரத்தை வழங்கும் இந்த திட்டம், மாநிலத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும். குறைந்த உமிழ்வு மற்றும் அதிக செயல்பாட்டுத் திறனை உறுதிசெய்ய நவீன தொழில்நுட்பங்களை இது பயன்படுத்தும்.
மிகப்பெரிய தனியார் துறை முதலீடு
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 500 மெகாவாட் ஆற்றல் சேமிப்பு திறனுக்கான ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்த திட்டங்கள், ஆற்றல் சேமிப்பு, கட்டம் உறுதிப்பாடு மற்றும் அதிகப்படியான மின்சார தேவையை நிர்வகிப்பதற்கான அதிநவீன தீர்வுகளை அறிமுகப்படுத்தும். இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைத்து, அசாமின் பசுமையான எதிர்காலத்திற்கு உதவும்.
இது பற்றி அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி கூறுகையில், "இந்தியாவின் வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்களும் ஒரு முக்கிய பகுதியாக உருவாகி வருகிறது. அதன் மாற்றத்திற்குப் பங்களிப்பதில் பெருமை கொள்கிறோம். அசாமில் எங்கள் 3,200 மெகாவாட் அனல்மின் நிலையம் மற்றும் 2,700 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்கள், இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடு மட்டுமல்லாமல், ஆற்றல் பாதுகாப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நோக்கிய உறுதியான படிகளையும் குறிக்கின்றன" என்று தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்கள் முழுமைக்கும்
மேலும் அவர் கூறுகையில், "இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், அசாமிற்கு மின் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் இன்றி வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பயனளிக்கும். அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உள்ளூர் சமூகங்களை மேம்படுத்தவும், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை மேம்படுத்தவும் உங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்" என்று அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications